முகாநூளில் தொடர

திங்கள்

ஹலால்(Halal) என்றால் என்ன ??

பொது மக்கள் சிந்தனையில் மிக நீண்ட நாட்களாக ஓடி கொண்டிருக்கும் கேள்வி இது ? பெரும்பாலான அசைவ உணவகங்களில் குறிப்பிட்டிருக்கும் 100 % (ஹலால்) - நம்மவர்கள் பெரும்பாலனவர்கள் நினைப்பது சுத்தம் என்றுதான் . அதன் உண்மை விளக்கம் தான் என்ன வாருங்கள் அலசுவோம் !!!

சுருக்கமாக ஹலால் என்பது கால்நடைகளை அறுக்கும் போது அதன் கழுத்து பகுதி முழுவதும் அறுபடாமல் மூளைக்கு செல்லும் நரம்பு வரை அறுபதால் ,அதன் வலியை உணர்த்தும் நரம்புகள் துண்டிக்க பட்டு வலியை உணராமல் இருக்க செய்வதே ஹலால் ஆகும் . இப்படி அறுக்கும் போது அதன் முழு ரத்தமும் வெளிப்பட்டு ரத்தத்தின் மூலம் நோய் பரவுதல் தடுக்கபடுகிறது. இதற்கு மற்றுமொரு காரணம் இறைவன் அனுமதி படி அறுபது என்பது பொருள்

ஹலால் முறையில் கால்நடைகளை அறுக்கும் விதம்:-

A. கால்நடைகளை அறுக்க பயன்படும் கத்தி அல்லது வாள் மிகக் கூர்மையானதாக இருக்க வேண்டும்.

கால்நடைகள் மிகக் கூர்மையான கத்தி அல்லது வாளால் அறுக்கப்பட வேண்டும். அறுக்கும் போது கால்நடைகள் வலியை உணராதவாறு அல்லது மிகக் குறைவாகவே வலியை உணருமாறு – மிக வேகமாக அறுக்கப்பட வேண்டும்.

B.
மேற்படி ஹலால் முறையில் கால்நடைகளை அறுக்கும்போது கழுத்தில் உள்ள மூச்சுக் குழாயும் இரத்தக்குழாயும் ஒரே சமயத்தில் அறுக்கப்பட்டு – கால்நடைகளை உயிரிழக்கச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்போது கால்நடைகளின் நரம்பு மண்டலம் துண்டிக்கப்படாமல் இருக்க வேண்டும்.

C. அறுக்கப்பட்ட கால்நடைகளின் உடலில் உள்ள இரத்தம் முழுவதும் வழியும்படிச் செய்ய வேண்டும்.

இரத்தம் முழுவதும் வழிந்தோடச் செய்வதன் நோக்கம் ?

அறுக்கப்பட்ட கால்நடைகளின் இரத்தம் – இரத்தக் குழாய்களில் தங்கி கிருமிகள் உருவாகாமல் இருக்க வேண்டியாகும். கால்நடைகளை அறுக்கும் போது தண்டுவடம் துண்டிக்கப்படாமல் இருக்க வேண்டும். தண்டுவடும் துண்டிக்கப்படுவதால் – இதயத்திற்கு செல்லக்கூடிய இரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு – இதயம் நின்று போகக் கூடிய நிலை உண்டாகலாம். இதனால் இதயத்தில் உள் இரத்தம் இரத்த நாளங்களில் தங்கிவிடக் கூடும்.

D. கிருமிகளும் – நோய்க்கிருமிகளும் உருவாக காரணமாக அமைவது இரத்தமே !

கிருமிகளும் – நோய்க்கிருமிகளும் உருவாக காரணமாக அமைவது உடலில் உள்ள இரத்தமே. ஹலால்முறையில் கால்நடைகளை அறுக்கும்போது – கால்நைடகளின் உடலில் உள்ள இரத்தம் முழுவதும் வழிந்தோடச் செய்யப்படுவதால் நோய்க்கிருமிகள் உருவாவதில்லை.

E. . ஹலால் முறையில் அறுக்கப்படும் கால்நடைகளின் இறைச்சி நீண்ட நேரம் கெட்டுப் போகாமல் இருக்கும்.

ஹலால் முறையில் அறுக்கப்படும் இறைச்சியில் இரத்தம் கலந்து விடாமல் இருப்பதால் – வேறுவிதமாக கொல்லப்படும் கால்நடைகளின் இறைச்சியைவிட ஹலால் முறையில் அறுக்கப்படும் இறைச்சி நீண்ட நேரம் கெடாமல் இருக்கும்.

F. ஹலால் முறையில் கால்நடைகளை அறுக்கும்போது – கால்நடைகள் வலியை உணர்வதில்லை.

இதன் முறையில் கால்நடைகள் அறுக்கப்படும்பொழுது – கால்நடைகளின் கழுத்து நரம்புகள் மிக வேகமாக அறுக்கப்பட்டு வலியை மூளைக்குக் கடத்திச் செல்லக்கூடிய நரம்பு மண்டலம் துண்டிக்கப்பட்டு விடுவதால் அறுக்கப்படும் கால்நடைகள் வலியை உணர்வதில்லை. இரத்தம் உடலிலிருந்து வெளியேறுவதால் – உடலில் உள்ள சதைப்பாகங்கள் – இரத்தம் இன்றி சுருங்கி விடுவதால் ஏற்படும் மாற்றத்தால் தான் அறுக்கப்பட்ட மிருகங்கள் – துள்ளுவதாகவும் – துடிப்பதாகவும் நமக்குத் தெரிகின்றதேத் தவிர வலியால் அல்ல.

இதை உண்மை படுத்தும் விதமாக ஹலால் முறையில் அறுக்க பட்ட உயிரினமும் ,வேறு விதமாக (தலை துண்டிக்கப்பட்டு ) அறுக்க பட்ட உயிரினங்களை விட ஹலால் கால்நடைகள் மிக குறைந்த (painless dead ) வலியை உணர்வதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது ..

சனி

கல்யாணசுந்தரம்

இவரை பலருக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை, இவர்தான் ரஜினியின் தத்து தந்தை -- அதிர்ச்சி அடையாமல் முழுவதும் படியிங்கள், ஆச்சிரியபடுவிர்கள்.

இவர் பெயர் கல்யாணசுந்தரம், இவர் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர், 30 வருடங்கள் நூலகராக பணியாற்றியவர், அவர் சம்பாரித்த அனைத்து பணத்தையும் ஏழைகளுக்காக கொடுத்தவர். தன் தேவைகளுக்காக ஓட்டலில் பணியாற்றி, அதில் சம்பாதித்த பணத்தில் தன் அன்றாடச் செலவுக்கென மிகச் சொற்ப தொகையை மட்டும் எடுத்துக்கொண்டு, மீதியை தர்ம காரியங்களுக்கு பிரதிபலன் பாராமல் வழங்கியவர். உலகிலேயே சம்பாதித்த அணைத்து பணத்தையும் சமூக சேவைக்கு வழங்கிய முதல் நபர் இவர் தான்.

மிகச் சிறந்த சமூக சேவகர். தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்பவர். சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய தேசிய பாதுகாப்பு நிதிக்கு நன்கொடை வழங்கிய முதல் மாணவர் என்கிற பெருமையைப் பெற்றவர்.

நூலகராகப் பணியாற்றி, தனக்குக் கிடைத்த பத்து லட்சம் ரூபாய்க்கும் மேலான பென்ஷன் தொகையை அப்படியே தூக்கிக் குழந்தைகள் நல நிதிக்காகக் கொடுத்தவர்

அதன் பின்னரும், இவருக்காகப் பல பிரமுகர்கள் மனமுவந்து கொடுத்த லட்சக்கணக்கான தொகைகளையும், தனக்கென ஒரு பைசாகூட எடுத்துக்கொள்ளாமல், சமூக நலக் காரியங்களுக்காகவே வாரி வழங்கியவர்.

இவரை பாராட்டி ஐ நா சபை "one of the Outstanding People of the 20th Century " என்ற பட்டமளித்து கவரவித்துள்ளது. அமெரிக்கா இவருக்கு "Man of the Millennium " என்று பட்டமும் 30 கோடி பரிசு பணமும் வழங்கியது அந்த 30 கோடி ரூபாயை உலக குழந்தைகள் நலனுக்காக கொடுத்து விட்டார்.

இவருடைய பொது சேவைகள்

1) ஏழை எளிய மாணவர்களை தத்து எடுத்து கொள்ளுதல்

2) மாணவ மாணவியர்களின் கல்வி வளர்ச்சிக்கு சீருடை, நோட்டு புத்தகம் வழங்குதல்

3) 10 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில் மாநில அளவில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெறும் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பரிசு வழங்குதல்.

4) பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிலும் நல் ஒழுக்கம், பொது அறிவு, அதிக மதிப்பெண் ஆகியவற்றுடன் தேர்வு அடையும் மாணவர்களுக்கு பரிசு வழங்குதல்.

இவரை பற்றி கேள்வி பட்ட நம் தலைவர் என்ன செய்தார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினி இவர் நற்பண்புகளை கண்டு "இவரை தந்தையாக" தத்து எடுத்து வீட்டில் வைத்திருந்தார்.ஆனால் சில காரணங்களால் அங்கிருந்து வெளியேறி சிறிய அறையில் தங்கியிருக்கிறார்.

தான் செய்யும் எந்த ஒரு நல்ல செயலையும் வெளிய சொல்லாத நம் தலைவர், இதையும் வெளிய சொல்ல வில்லை, பின்னர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களே ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியை பாருங்கள்.

நிருபர் : “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உங்கள் மீது பெரு மதிப்பு வைத்து, உங்களைத் தன் தந்தை போல் நினைத்து, அன்போடு உங்களைத் தன் வீட்டுக்கு அழைத்து வைத்துக் கொண்டாரே... அங்கிருந்து ஏன் வெளியேறிவிட்டீர்கள்?”

ஐயா : ஆமாம். ரஜினிகாந்துக்கு என் மேல் மிகுந்த பிரியம்தான். எனக்காக இரண்டு பெரிய அறைகளை, சகல வசதிகளுடன் ஒதுக்கித் தந்திருந்தார். ஆனாலும், எனக்கு அந்த அறையில் படுக்க இருப்புக் கொள்ளவில்லை. நான் மாடிப்படி வளைவுக்குக் கீழேதான் என் உடைமைகளை வைத்திருந்தேன். அங்கேதான் தரையில் ஒரு துணியை விரித்துப் படுத்துக் கொள்வேன். என்றாலும், ஏழைகளுக்காக உழைக்கிறவன் என்று என்னைச் சொல்லிக்கொண்டு ரஜினிகாந்த் வீட்டில் தங்கியிருந்தால், யார்தான் ஒப்புக் கொள்வார்கள்? ‘இல்லை; அங்கே நான் ரொம்ப எளிமையாக, மாடிப்படி வளைவில்தான் படுத்துக் கொள்வேன்’ என்று சொன்னாலும், யார் நம்புவார்கள்? பனை மரத்தடியில் நின்றுகொண்டு பாலைக் குடித்தாலும் அதைக் கள் என்றுதானே உலகம் நினைக்கும்? அது இயல்புதானே? எனவேதான், முள் மேல் இருப்பதுபோல் நான்கு மாதங்கள் அங்கு இருந்துவிட்டு, பின்பு வெளியேறிவிட்டேன். அதில் ரஜினிக்கு ரொம்ப வருத்தம்தான்!”

நிருபர் : “உங்களை வசதியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற ஆசையில் உங்களைத் தன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டார் ரஜினி. நீங்களோ அங்கே போயும் துண்டை உதறித் தரையில் படுத்துக்கொண்டால், அவருக்குமே அது ரொம்பக் கஷ்டமாகத்தான் இருந்திருக்கும்”

ஐயா : “நான் போட்டிருக்கும் இந்த ரப்பர் செருப்பு என்ன விலை இருக்கும், சொல்லுங்க பார்க்கலாம்?”

நிருபர் : “என்ன, ஒரு நாற்பது நாற்பத்தைந்து ரூபாய் இருக்கலாம்”

ஐயா : “அதான் இல்லை. ரொம்பப் பேர் அதான் நினைக்கிறாங்க. இது ஒரு பிளாட்பாரக் கடையில் ஏழரை ரூபாய்க்கு வாங்கினது”

நிருபர் : “என்னது..! ஏழரை ரூபாய்க்கு செருப்பா?!”

ஐயா : “ஆமாம். தேடினால் கிடைக்கும். நான் அதுக்கு மேல செருப்புல காசைப் போடுறது இல்லே. நான் கட்டியிருக்கிற இந்த வேட்டி, போட்டிருக்கிற சட்டை இது ரெண்டும் என்ன விலை இருக்கும்னு கண்டுபிடியுங்க பார்க்கலாம்!"

நிருபர் : வேட்டி 40 ரூபாய், சட்டை 75 ரூபாய் இருக்கலாம்

ஐயா : "தப்பு! சொன்னா நம்ப மாட்டீங்க. வேட்டி வெறும் இரண்டு ரூபாய், சட்டை வெறும் மூணு ரூபாய்."

நிருபர் : “என்ன... நிஜமாத்தான் சொல்றீங்களா?”

ஐயா : “உண்மையா! துணிகளை 50 சதவிகிதம், 60 சதவிகிதம்னு தள்ளுபடி ரேட்ல போட்டு விற்பாங்க, பார்த்திருக்கீங்களா? கொஞ்சம் காத்திருந்தா, அந்தத் தள்ளுபடி 70 சதவிகிதம், 90 சதவிகிதம் வரைக்கும்கூட வந்துடும். கடைசியில, ஸ்டாக் குளோஸிங்னு சொல்லி மிச்சம் மீதி இருக்கிற துணிகளை வந்த விலைக்குத் தள்ளிக் கடையைக் காலி பண்ணுவாங்க இல்லியா... அப்ப போய்க் கேட்டா, இப்படி ரெண்டு ரூபாய்க்கும், மூணு ரூபாய்க்கும் துணிமணிகள் கிடைக்கும். என்ன... உள்ளே சில இடங்கள்ல கிழிசல் இருக்கும். பொத்தல்கள் இருக்கும். அதைத் தெச்சுக்கிட்டா போச்சு!”

இவர்தான் திரு. பாலம் கல்யாண சுந்தரம்.

பாலம் ஐயா அவர்கள் உரை: - (அல்லது வேண்டுகோள்) :

தமிழக அரசு ஊழியர்கள் நிலுவை தொகை பெறுவோர் தொகை 1150 கோடி. தங்களது நிலுவை தொகையினை அரசு வழங்கும்போது அவர்கள் புதிய சம்பளத்தில் ஒரு ரூபாய்க்கு ஒரு பைசா அளித்தாலே ஒரு ஆண்டுக்கு ரூ. 3,000 கோடி கிடைக்கும்.

மத்திய அரசு 6வது ஊதியக்குழு அமுலானது அவர்களும் 17 சதவீதம் கொடுத்தால் ரூ. 4,000 கோடி கிடைக்கும்.

இந்த 3000 கோடியை, மக்கள் வரிபணத்தின் மூலம்தான் அரசு ஊதியம் மற்றும் நிலுவை தொகை அளிக்கிறது. வரி செலுத்தும் கோடிக்கணக்கான ஏழை மக்கள் பிள்ளைகள் படிக்க நமது வருவாயில் ஒரு சிறு பகுதியை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே, இதை முழுவதும் கல்விக்கு பயன்படுத்தினால் அனைவருக்கும் ஏற்ற தாழ்வு இல்லா கல்வி கிடைக்கும்.

இவரை மாதிரி இருக்கிற நல்ல மனுஷங்க நாலு பேருக்கு தெரியணும். நம் தலைவரின் மனதும் அவரது நற்பண்புகளும் நமக்கு தெரிந்ததே அனால் இவரை போன்ற சூப்பர் ஸ்டார்கள் தெரியாமலே சென்று விடுகிறார்கள், அவரை நாம் இங்கு நம் தலைவர் சார்பாக, அவரின் தத்து தந்தையை கவுரவிப்போம்

இந்த செய்தியை அனைவரும் share செய்ய வேண்டுகிறோம்..

வெள்ளி

கொழுப்பைக் குறைக்கும் வழி


கொழுப்பு:


இன்றைய நவீன வாழ்க்கை சூழலில், பெரும்பாலானோர், வாய்க்கு ருசியாக இருக்கிறது என்று 'வறுத்தது, பொரித்தது’ போன்ற எண்ணெய் உணவுகளை ஒரு கட்டு கட்டிவிடுகின்றனர். இதனால் உடம்பில் கொழுப்பு அதிகரித்து, எடை கூடி, நடக்க முடியாமல் திண்டாடுகின்றனர். இன்று எடையை குறைப்பதற்காக பலர் நடைபயிற்சி மேற்கொள்வதை கண்கூடாக பார்க்கமுடிகிறது.

இப்படி நம் உடலுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி, பல்வேறு நோய்களின் வாசஸ்தலமாக இருப்பது 'கொலஸ்ட்ரால்’ என்கிற கெட்டக் கொழுப்புதான்.

*நீங்கள் ஒரு கார் வைத்துள்ளீர்கள். அதில் தினம் 2 லிட்டர் பெட்ரோல் ஊற்றுகிறீர்கள். தினம் 1 லிட்டர் பெட்ரோலை வண்டி ஓட்டுவதன் மூலம் செலவு செய்கிறீர்கள். ஆகத்  தினம் 1 லிட்டர் பெட்ரோல் மீதி. கார் என்றால் பெட்ரோல் டாங்கின் கொள்ளளவு போக மீதமுள்ள பெட்ரோலை ஏற்காமல் வெளியே தள்ளிவிடும். மனித உடலுக்கு அந்தச்  சக்தி இல்லை. மீதமாகும் எரிபொருளை (உணவை எரிப்பதால் கிடைக்கும் எனெர்ஜி) கொழுப்பாக மாற்றி உடலில் சேர்த்து வைக்கும்.

இப்படி உடலில் சேரும் கொழுப்பு நாளாவட்டத்தில் நம் ரத்தக் குழாய்களிலும் சேர்கிறது. அப்போது ரத்தம் உடலுக்குள் எளிதாகச்  சென்று வருவது தடுக்கப்பட்டு இதயத்துக்கு ரத்தம் போகாமல் ஹார்ட் அட்டாக் வந்து மரணம் சம்பவிக்கிறது.

இப்படிச்  சேரும் கொழுப்பையே கொலஸ்டிரால் என்கிறோம். இதைக்  கரைக்க இரு வழிகள் உள்ளன.

மீண்டும் கார், பெட்ரோல் உதாரணத்தை நினைவில் கொள்வோம். பெட்ரோல் டாங்கில் அதிகம் பெட்ரோல் இருந்தால் அதை எப்படிச்  செலவு செய்வோம்? கார் ஓட்டி, அதாவது உடல்பயிற்சி.

இன்னொரு வழி குறைவாக உண்பது. அதாவது நாம் தினம் செலவு செய்யும் கலோரியை விடக்  குறைவான கலோரிகளை உண்டால் உடல் தான் சேர்த்து வைத்த கொழுப்பிலிருந்து சக்தியை எடுத்துச் செலவு செய்யும். அதாவது கொழுப்பை எப்படிச்  சேர்த்து வைத்ததோ அதே போல் எரித்துவிடும்.

நல்ல கொழுப்பு என்றால் என்ன? அதாவது ஒருவகைக் கொழுப்பு உடலில் ஜீரணத்துக்கு உதவுகிறது. இந்த வகைக் கொழுப்பு சோயா பீன் ஆயில், சூரியகாந்தி எண்ணெய், சஃபோலா ஆயில் போன்றவற்றில் காணப்படுகிறது. பாதாம், பிஸ்தா, வால்நட் போன்ற கொட்டைகளில் காணப்படுகிறது.

ஆக நாம் செய்யவேண்டியது

1) கெட்ட கொழுப்பு நிறைந்து காணப்படும் பாம் ஆயில், கடலை எண்ணெய், நெய் ஆகியவற்றை ஒதுக்க வேண்டும். இதற்குப் பதில் சூரியகாந்தி எண்ணெய், சோயா ஆயில் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். இதனால் உடலில் கெட்ட கொழுப்பு சேர்வது ஓரளவு குறையும். நல்ல கொலஸ்டிரால் ஏறும்

2) முட்டை மஞ்சள் கருவைத்  தவிர்க்க வேண்டும். வெள்ளைக் கருவை உண்ணலாம்.
சிகப்பு மாமிசம் எனச்  சொல்லப்படும் ஆட்டுக்கறி, பன்றிக்கறி, மாட்டுக்கறி ஆகியவற்றைத்  தவிர்க்கவேண்டும்.

அதற்குப் பதில் வெள்ளை மாமிசம் எனச் சொல்லப்படும் சிக்கன், மீன் ஆகியவற்றை உண்ணலாம். சிக்கனிலும் தோலை நீக்கிவிட்டு மாமிசத்தைத் தான் பயன்படுத்த வேண்டும்

3) தினமும் உடல்பயிற்சி செய்தால் நல்ல கொலஸ்டிரால் தானாக ஏறும். தினமும் குறைந்தது மூன்று மைல் (ஐந்து கிமி) நடைப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

4) உணவின் அளவைக் குறைக்க வேண்டும். சூரியகாந்தி எண்ணெயில் பொறித்த வடைதானே என அதில் புகுந்து விளையாட கூடாது. எண்ணெய் பலகாரம், இனிப்புகள் ஆகியவை முழுக்க ஒதுக்கப்படவேண்டும்.

மிகப் போர் அடித்தால் வாரம் ஒரு நாள் ஒரு தடவை வடை, பஜ்ஜி போன்றவற்றை மிதமான அளவில் உண்டுகொள்ளலாம்.

உணவில் காய்கறி, பழம் ஆகியவை அதிக  இடம்பெற வேண்டும் (உருளைக் கிழங்கும்,
வாழைப்பழமும் கூடாது. அதில் கலோரிகள் அதிகம். இவற்றை மிதமாக உண்ணலாம்)

உடல் பயிற்சி செய்ய முடியாது என சொல்பவர்கள் கூட வாழ்வில் சிறு, சிறு மாற்றங்களை கொண்டு வந்தால் கணிசமான அளவில் முன்னேற்றம் காணலாம். உதாரணமாக

1) காபியில் தினம் 3 ஸ்பூன் சர்க்கரை போட்டு தினம் மூன்று காபி குடிக்கிறோம் என வைத்துக் கொள்வோம். அதில் 3 ஸ்பூனுக்குப் பதில் இரண்டு ஸ்பூன் சர்க்கரை போட்டுக் கொண்டால் சுவையில் பெரிதாக வித்தியாசம் இருக்காது. ஆனால் ஆறு மாதத்தில் அதனால் சுமார் அரை கிலோ எடை குறையும்.

2) 8% கொழுப்பு இருக்கும் பாலை வாங்குவதுக்குப் பதில் 2% கொழுப்பு உள்ள பாலை வாங்கினால் பெரிதாகச் சுவையில் வித்தியாசம் இருக்காது. ஆனால் தினம் ஒரு கப் பால் என வைத்துகொன்டால் அதனால் இரண்டு மாதத்தில் ஒரு கிலோ எடை குறையும்.

3) ஆபிசில் லிப்டைப் பயன்படுத்துவதுக்குப் பதில் படியைப் பயன்படுத்தலாம். கொஞ்சம் சிரமம் ஆனால் முடியாதது அல்ல. தினம் 3 நிமிடம் படியில் ஏறி இறங்கினீர்கள் என வைத்துப் கொன்டால் ஒரு வருடத்தில் சுமார் ஒரு கிலோ எடை குறையும்.

ஆக இப்படிச் சின்னச்  சின்ன மாற்றங்கள் கொண்டுவருவதன் மூலம் மட்டுமே ஒரே வருடத்தில் நாலைந்து கிலோ எடை குறையும்.

40 நிமிட உடல்பயிற்சி

உடல்பயிற்சி செய்கையில் உடலில் நிகழும் மாற்றங்கள்
குறைந்தது 40 நிமிடம் நடந்தால் என்ன விளைவுகள் உடலில் ஏற்படுகின்றன என்பது பற்றிய விளக்கம்

மூளை:

நாம் உடல்பயிற்சி செய்யத் துவங்கியவுடன் மூளை உடலின் அனைத்துப்பாகங்களுக்கும் அலெர்ட் சிக்னலை அனுப்புகிறது. உடனே அதிக  ஆக்சிஜன் சுவாசிக்கத் துவங்குகிறோம். இதயத் துடிப்பு விரைவடைகிறது. வியர்க்கத்துவங்கியவுடன் மூளை உடலில் ஏற்படும் களைப்பைப் போக்க என்டார்பின்களையும்,டொபொமைன்களையும்  ரிலீஸ் செய்கிறது. இது மனதுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் ஹேப்பி கெமிக்கல். நமக்கு மகிழ்ச்சியான மூடை வரவழைத்து உடலுக்குப் புத்துணர்ச்சி அளிக்கிறது

இதயம்

உடல்பயிற்சி செய்யத் துவங்கிய அடுத்த வினாடியே நம் இதயம் விரைவாகத் துடிக்கத் துவங்குகிறது. ஒவ்வொரு துடிப்பிலும் அதிக ரத்தம் பம்ப் செய்யபடுகிறது.மிக அதிக வேகத்தில் ஓடினால் நிமிடத்துக்கு 160 - 180 வரை இதயத் துடிப்பு உயர்கிறது (சராசரி 60 - 80 நிமிடத்துக்கு). உடல்பயிற்சி செய்கையில் இதயத்துடிப்பு உயர்வதால் நார்மலாக இருக்கையில் துடிக்க வேண்டிய விகிதம் குறைந்து இதயத்துக்கு நல்ல ஓய்வு கிடைக்கிறது.

நுரையீரல்

நடக்கையில்/ ஓடுகையில் நுரையீரல் அதிகமான வேகத்தில் மூச்சு வாங்குகிறது.இதனால் உடலுக்கு அதிக  ஆக்சிஜன் கிடைக்கிறது. உடலுக்கு எத்தனை அதிகமாக ஆக்சிஜன் கிடைக்கிறகோ அத்தனை அதிக அளவில் உடலில் இருக்கும் அசுத்தப் பொருளான கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றப்படும்

கொழுப்பு செல்கள்

நீன்ட நேரம் மெதுவாக நடந்தால் உடல் கார்போஹைட்ரே(ட்ஸை எரிப்பதை நிறுத்தி உடலில் உள் கொழுப்பு சத்தை எரிக்க துவங்குகிறது.

உடல்பயிற்சி செய்யத் துவங்கிய முதல் 20 நிமிடம் கார்போஹைட்ரேட்டுகளை  உடல் எரிக்கும். அதன் பின் 21 ஆவது நிமிடத்தில் இருந்து நீங்கள் உடல்பயிற்சி செய்யும் ஒவ்வொரு வினாடியும் உடல் கொழுப்பைத் தான் எரிக்கும். கொழுப்பை எரிக்க எரிபொருளானஆக்சிஜன் அதிகம் தேவை. அதனால் ஒரு அரைமணிநேரம் நடந்தபின்னர் அதிகம் மூச்சு வாங்குவதை உணரலாம். அது உங்கள் உடல் கொழுப்பை எரிக்கிறது என்பதற்கான அறிகுறி.

அதனால் 20 நிமிடத்தைத்  தாண்டியபின்னர் நிறுத்தாமல் எத்தனை நேரம் தொடர்ந்து நடக்க முடியுமோ அதைத் தொடருங்கள்.*


(*நன்றி செல்வன் )

செவ்வாய்

கணினி பயன்படுத்துவோர் திருத்தி கொள்ள வேண்டிய தவறுகள்

வாரம் இரு நாட்களில் நல்ல உடற்பயிற்சி, தினந்தோறும் இறைவணக்கம், அலுவலகத்தில் சீரான பணி, சட்டம் மதித்து நடத்தல் என நாம் நம் அன்றாட வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் பலவற்றை மேற்கொள்கிறோம். ஆனால் தொழில் நுட்பம் என்று வருகையில் நாம் பல தவறுகளை ஏற்படுத்துகிறோம். இன்று நம் வாழ்க்கையில் சில தவறுகளைத் திருத்திக் கொள்கிறோமோ இல்லையோ, கம்ப்யூட்டர் பயன்படுத்தும் வழக்கத்தில் உள்ள தவறுகளை நாம் கட்டாயம் மாற்றிக் கொண்டே ஆக வேண்டும். இல்லையேல், வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்பட்டு விடும். அந்த அளவிற்கு கம்ப்யூட்டர் நம் வாழ்வுடன் கலந்து விட்டது. கம்ப்யூட்டர் பயன்பாட்டில் நாம் ஏற்படுத்தும், சில சாதாரண தவறுகளை இங்கு காணலாம்.

1. டெஸ்க்டாப்பில் அதிக ஐகான்கள்:


பலரின் விண்டோஸ் டெஸ்க்டாப், எதனையும் ஏற்றுக் கொள்ளும் நம் மேஜை டிராயர் மாதிரி, குப்பையாய் காட்சி அளிக்கிறது. நாம் அதில் வைத்த பைலையே தேடி உடனே எடுக்க முடிவதில்லை. இப்போதுதானே, டெஸ்க்டாப்பில் சேவ் செய்தேன், காணலையே? என்று சொல்லிவிட்டு, விண்டோஸ் எக்ஸ்புளோரர் சென்று, அதே டெஸ்க்டாப் ட்ரைவில் தேடிக் கண்டுபிடிப்போர் உள்ளனர். இந்த தவறுக்குக் காரணம், அளவுக்கு அதிகமான ஐகான்களைக் குவிப்பதுதான். இதனாலேயே விண்டோஸ் இயக்கம், "பல ஐகான்கள் வெகுநாட்களாகப் பயன்படுத்தப் படாமல் இருக்கின்றன; அவற்றைச் சரி செய்திடலாமா?' என்று பிழைச் செய்தி காட்டுகிறது. இதனை எப்படி சரி செய்திடலாம்? அவ்வப்போது பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஐகான்களுக்குரிய பைல்களை, சார்ந்த ட்ரைவ்களுக்குக் கொண்டு சென்று வைக்க வேண்டும். பைல்களை இணையத்தில் இருந்து டவுண்லோட் செய்கையில், பெரும்பாலும் டெஸ்க் டாப்பிலேயே டவுண்லோட் செய்து வைக்கிறோம். அவசர வழிக்கு இது சரிதான். ஆனால் அடுத்து, அந்த பைலின் தன்மை, பொருள் சார்ந்து அதனை, அதற்கான ட்ரைவிற்குக் கொண்டு செல்ல வேண்டும்.

2. ஷட் டவுண் செய்திட பவர் பட்டன்:

இது லேப்டாப் கம்ப்யூட்டர் சார்ந்த செய்தி. பலர் லேப்டாப் கம்ப்யூட்டரின் பணி முடிந்தவுடன், அதனை முறையாக ஷட் டவுண் செய்திடுவதில்லை. பவர் பட்டனை அழுத்தி, கம்ப்யூட்டர் இயக்கத்தினை முடிவிற்குக் கொண்டு வருகிறோம். அல்லது கொண்டு வருவதாக நினைக்கிறோம். பல லேப்டாப்களில் இந்த பவர் பட்டன், லேப்டாப் கம்ப்யூட்டரை ஸ்லீப் மோட் என்னும் செயலற்ற நிலைக்குத்தான் கொண்டு செல்லும். இது ஒன்றும் மோசமான தவறு அல்ல. இது போலத் தூங்கும் லேப்டாப், சில நொடிகளில் இயக்கத்திற்கு வந்துவிடும். ஆனாலும் இவ்வாறு செய்வது தவறு. இதற்கான காரணங்கள் இரண்டு. முதலாவதாக, ஸ்லீப் மோட் என்பது முற்றிலும் அனைத்தும் நிறுத்தப்பட்ட நிலை அல்ல. பேட்டரியின் பவர் அப்போதும் செலவழிந்து கொண்டு தான் இருக்கும். எனவே, தொடர்ந்து அது மின்சார சாக்கெட் ஒன்றில் இணைக்கப்பட்டிருந்தாலே, பாதுகாப்பாக இருக்கும். இல்லையேல், அதன் பேட்டரி பவர் தீர்ந்து போய்,மொத்தமும் சக்தி அற்ற பேட்டரி கொண்ட லேப்டாப் தான் உங்களுக்குக் கிடைக்கும். இரண்டாவதாக, நீங்கள் எப்போதும் கம்ப்யூட்டரை நிறுத்தி வைக்க, ஸ்லீப் மோடினை விரும்புவதாக இருந்தால், அது கம்ப்யூட்டரை ரீ பூட் செய்திடும் வாய்ப்பினையே இழக்கிறது. விண்டோஸ் சுமுகமாக இயங்க வேண்டும் என்றால், அது முற்றிலும் நிறுத்தப்பட்டு, பின்னர் ரீ பூட் செய்யப்பட வேண்டும்.
பவர் பட்டன் அழுத்தி, லேப்டாப் கம்ப்யூட்டரின் இயக்கத்தினை நிறுத்தச் செய்வது, கம்ப்யூட்டர் கிராஷ் ஆகும்போது மேற்கொள்ள வேண்டிய செயலாகும். ஏனென்றால் அப்போது வேறு வழி கிடைக்காது.

3. வலுவான பாஸ்வேர்ட்களை நோட்பேடில் எழுதுதல்:


எது வலுவான பாஸ்வேர்ட்? பிறர் எந்த வகையிலும் கண்டறிய இயலாத பாஸ்வேர்ட்களை வலுவான பாஸ்வேர்ட்கள் என்று சொல்கிறோம். ஆனால், இத்தகைய பாஸ்வேர்ட்களை உருவாக்கிப் பயன்படுத்தும் பலரில், ஒரு சிலர், அவற்றை தங்கள் கம்ப்யூட்டரிலேயே நோட்பேடில், ஒரு டெக்ஸ்ட் பைலில் எழுதி வைப்பார்கள். இதனால் வலுவான பாஸ்வேர்ட் உருவாக்கியும் எந்த பயனும் இல்லாமல் போகிறது. நமக்கு பாஸ்வேர்ட்களை உருவாக்கித் தரவும், அவற்றை பாதுகாப்பான பாஸ்வேர்ட் மேனேஜர் மூலம் பாதுகாக்கவும், பல புரோகிராம்கள் இணையத்தில் கிடைக்கின்றன. விலை கொடுத்தும் சிலவற்றைப் பெறலாம். அவற்றைப் பயன்படுத்தி, நம் பாஸ்வேர்ட்களை பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும்.

4.மவுஸ் பயன்படுத்தி புரோகிராம் இயக்கம்:


ஒரு புரோகிராமினை இயக்க ஒவ்வொரு முறையும், ஸ்டார்ட், ஆல் புரோகிராம்ஸ் சென்று, புரோகிராமின் இயக்க பைல் பார்த்து கிளிக் செய்வது; அல்லது அதன் ஐகான் மீது டபுள் கிளிக் செய்வது போன்ற பழைய பழக்கங்களை விட்டுவிடுங்கள். அல்லது குயிக் லாஞ்ச் ஏரியாவில், புரோகிராம் ஐகான்களை வைத்து, அதில் ஒரே ஒரு முறை கிளிக் செய்வதன் மூலம் அவற்றை இயக்கலாம். இப்போது இன்னும் வேகமான முறை ஒன்று உள்ளது. விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 இயக்கத் தொகுப்புகளில், ஸ்டார்ட் பட்டனை அடுத்துள்ள இடத்தில் உள்ள புரோகிராம்களில் வரிசைப்படி, அதற்கான எண்ணை விண்டோஸ் கீயுடன் அழுத்தினால், அந்த புரோகிராம் இயக்கப்படும். எடுத்துக் காட்டாக, ஸ்டார்ட் பட்டனை அடுத்து, இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பெயிண்ட், குவார்க் எக்ஸ்பிரஸ் என வைத்திருந்தால், விண்+1, விண்+2 என அழுத்தினால், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், அடுத்ததாக பெயிண்ட் எனத் திறக்கப்படும்.

5. பாதுகாப்பற்ற பிளாஷ் ட்ரைவ் :


டேட்டாவினை எடுத்துச் செல்ல, பிளாஷ் ட்ரைவ்கள் மிகவும் வசதியானவை தான். ஆனால் இதில் உள்ள டேட்டாவினை, மற்றவர் அறியாதபடி என்கிரிப்ட் செய்து நாம் வைப்பதில்லை. இதனால், அது தொலைந்திடும் பட்சத்தில், நம் தனிப்பட்ட தகவல்கள் மற்றவருக்குக் கிடைத்திடும் சூழ்நிலைகள் உருவாகிவிடும். இதில் டேட்டாவினை எளிதாக என்கிரிப்ட் செய்திட, இணையத்தில் கிடைக்கும் ட்ரூகிரிப்ட் (TrueCrypt) போன்ற புரோகிராம்களைப் பதிந்து இயக்குவது நல்லது.

6.கண்ணை மூடிக் கொண்டு நெக்ஸ்ட் அழுத்துவது:


திடீரென நம் டெஸ்க்டாப்பில் ஏதேதோ படங்களுடன் ஐகான்கள் தோன்றி நம்மை ஆச்சரியப்படுத்தும். நாம் பயன்படுத்தும் வெப் பிரவுசரிலும் இதே போல் சில தோற்றமளிக்கும். இவை தோன்றுவதற்கு நாம் தான் காரணம் என்று உங்களுக்குத் தெரியுமா? சாப்ட்வேர் அப்ளிகேஷன் ஒன்றை இன்ஸ்டால் செய்திடுகையில், என்ன ஏது எனப் படிக்காமலேயே, அடுத்தடுத்து நெக்ஸ்ட் பட்டனை அழுத்துகிறோம். இதன் மூலம் அந்த புரோகிராம்களைத் தயாரித்த நிறுவனங்களின் சோதனை டூல்கள், புரோகிராம்களை நம் கம்ப்யூட்டரில் நிறுவ நாம் சம்மதம் அளிக்கிறோம். மேலும் நமக்குத் தேவைப்படாத சில இயக்கத்திற்கும் இசைகிறோம். இது போல நாம் நம்மை அறியாமல் அளிக்கும் சலுகைகள், நம் கம்ப்யூட்டரில் மால்வேர் புரோகிராம்களை நிறுவி, நம்மை சிக்க வைக்கின்றன. எனவே, ஒரு புரோகிராமினை இன்ஸ்டலேஷன் செய்கையில், இணையப் பக்கம் வழியாக ஒன்றை டவுண்லோட் செய்கையில், நம்மிடம் எதற்கு இசைவு கேட்கப்படுகிறது என்று சரியாகப் படித்துப் பார்த்து இயங்க வேண்டும்.

7. ஒரே ஒரு பேக் அப் அபாயம்:


பலர் தங்கள் பைல்களுக்குப் பேக் அப் எடுப்பதே இல்லை. இது மிகப் பெரிய தவறு. சிலர் ஒரே ஒரு பேக் அப் பைலுடன் நிறுத்தி விடுகின்றனர். இதுவும் தவறுதான். எக்ஸ்டர்னல் ஹார்ட் ட்ரைவ் ஒன்றைப் பயன்படுத்தி, முழுமையான பேக் அப் காப்பி ஒன்றை உருவாக்குவதும், அதற்கான சாப்ட்வேர் ஒன்றை இயக்கி, குறிப்பிட்ட கால கட்டத்தில் பேக் அப் காப்பி அமைப்பதுவும் மட்டுமே சரியான வழியாகும்.


(நன்றி: தினமலர் கம்ப்யூட்டர் மலர்)

கணினி பயன்படுத்துவோர் திருத்தி கொள்ள வேண்டிய தவறுகள்

வாரம் இரு நாட்களில் நல்ல உடற்பயிற்சி, தினந்தோறும் இறைவணக்கம், அலுவலகத்தில் சீரான பணி, சட்டம் மதித்து நடத்தல் என நாம் நம் அன்றாட வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் பலவற்றை மேற்கொள்கிறோம். ஆனால் தொழில் நுட்பம் என்று வருகையில் நாம் பல தவறுகளை ஏற்படுத்துகிறோம். இன்று நம் வாழ்க்கையில் சில தவறுகளைத் திருத்திக் கொள்கிறோமோ இல்லையோ, கம்ப்யூட்டர் பயன்படுத்தும் வழக்கத்தில் உள்ள தவறுகளை நாம் கட்டாயம் மாற்றிக் கொண்டே ஆக வேண்டும். இல்லையேல், வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்பட்டு விடும். அந்த அளவிற்கு கம்ப்யூட்டர் நம் வாழ்வுடன் கலந்து விட்டது. கம்ப்யூட்டர் பயன்பாட்டில் நாம் ஏற்படுத்தும், சில சாதாரண தவறுகளை இங்கு காணலாம்.

1. டெஸ்க்டாப்பில் அதிக ஐகான்கள்:


பலரின் விண்டோஸ் டெஸ்க்டாப், எதனையும் ஏற்றுக் கொள்ளும் நம் மேஜை டிராயர் மாதிரி, குப்பையாய் காட்சி அளிக்கிறது. நாம் அதில் வைத்த பைலையே தேடி உடனே எடுக்க முடிவதில்லை. இப்போதுதானே, டெஸ்க்டாப்பில் சேவ் செய்தேன், காணலையே? என்று சொல்லிவிட்டு, விண்டோஸ் எக்ஸ்புளோரர் சென்று, அதே டெஸ்க்டாப் ட்ரைவில் தேடிக் கண்டுபிடிப்போர் உள்ளனர். இந்த தவறுக்குக் காரணம், அளவுக்கு அதிகமான ஐகான்களைக் குவிப்பதுதான். இதனாலேயே விண்டோஸ் இயக்கம், "பல ஐகான்கள் வெகுநாட்களாகப் பயன்படுத்தப் படாமல் இருக்கின்றன; அவற்றைச் சரி செய்திடலாமா?' என்று பிழைச் செய்தி காட்டுகிறது. இதனை எப்படி சரி செய்திடலாம்? அவ்வப்போது பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஐகான்களுக்குரிய பைல்களை, சார்ந்த ட்ரைவ்களுக்குக் கொண்டு சென்று வைக்க வேண்டும். பைல்களை இணையத்தில் இருந்து டவுண்லோட் செய்கையில், பெரும்பாலும் டெஸ்க் டாப்பிலேயே டவுண்லோட் செய்து வைக்கிறோம். அவசர வழிக்கு இது சரிதான். ஆனால் அடுத்து, அந்த பைலின் தன்மை, பொருள் சார்ந்து அதனை, அதற்கான ட்ரைவிற்குக் கொண்டு செல்ல வேண்டும்.

2. ஷட் டவுண் செய்திட பவர் பட்டன்:

இது லேப்டாப் கம்ப்யூட்டர் சார்ந்த செய்தி. பலர் லேப்டாப் கம்ப்யூட்டரின் பணி முடிந்தவுடன், அதனை முறையாக ஷட் டவுண் செய்திடுவதில்லை. பவர் பட்டனை அழுத்தி, கம்ப்யூட்டர் இயக்கத்தினை முடிவிற்குக் கொண்டு வருகிறோம். அல்லது கொண்டு வருவதாக நினைக்கிறோம். பல லேப்டாப்களில் இந்த பவர் பட்டன், லேப்டாப் கம்ப்யூட்டரை ஸ்லீப் மோட் என்னும் செயலற்ற நிலைக்குத்தான் கொண்டு செல்லும். இது ஒன்றும் மோசமான தவறு அல்ல. இது போலத் தூங்கும் லேப்டாப், சில நொடிகளில் இயக்கத்திற்கு வந்துவிடும். ஆனாலும் இவ்வாறு செய்வது தவறு. இதற்கான காரணங்கள் இரண்டு. முதலாவதாக, ஸ்லீப் மோட் என்பது முற்றிலும் அனைத்தும் நிறுத்தப்பட்ட நிலை அல்ல. பேட்டரியின் பவர் அப்போதும் செலவழிந்து கொண்டு தான் இருக்கும். எனவே, தொடர்ந்து அது மின்சார சாக்கெட் ஒன்றில் இணைக்கப்பட்டிருந்தாலே, பாதுகாப்பாக இருக்கும். இல்லையேல், அதன் பேட்டரி பவர் தீர்ந்து போய்,மொத்தமும் சக்தி அற்ற பேட்டரி கொண்ட லேப்டாப் தான் உங்களுக்குக் கிடைக்கும். இரண்டாவதாக, நீங்கள் எப்போதும் கம்ப்யூட்டரை நிறுத்தி வைக்க, ஸ்லீப் மோடினை விரும்புவதாக இருந்தால், அது கம்ப்யூட்டரை ரீ பூட் செய்திடும் வாய்ப்பினையே இழக்கிறது. விண்டோஸ் சுமுகமாக இயங்க வேண்டும் என்றால், அது முற்றிலும் நிறுத்தப்பட்டு, பின்னர் ரீ பூட் செய்யப்பட வேண்டும்.
பவர் பட்டன் அழுத்தி, லேப்டாப் கம்ப்யூட்டரின் இயக்கத்தினை நிறுத்தச் செய்வது, கம்ப்யூட்டர் கிராஷ் ஆகும்போது மேற்கொள்ள வேண்டிய செயலாகும். ஏனென்றால் அப்போது வேறு வழி கிடைக்காது.

3. வலுவான பாஸ்வேர்ட்களை நோட்பேடில் எழுதுதல்:


எது வலுவான பாஸ்வேர்ட்? பிறர் எந்த வகையிலும் கண்டறிய இயலாத பாஸ்வேர்ட்களை வலுவான பாஸ்வேர்ட்கள் என்று சொல்கிறோம். ஆனால், இத்தகைய பாஸ்வேர்ட்களை உருவாக்கிப் பயன்படுத்தும் பலரில், ஒரு சிலர், அவற்றை தங்கள் கம்ப்யூட்டரிலேயே நோட்பேடில், ஒரு டெக்ஸ்ட் பைலில் எழுதி வைப்பார்கள். இதனால் வலுவான பாஸ்வேர்ட் உருவாக்கியும் எந்த பயனும் இல்லாமல் போகிறது. நமக்கு பாஸ்வேர்ட்களை உருவாக்கித் தரவும், அவற்றை பாதுகாப்பான பாஸ்வேர்ட் மேனேஜர் மூலம் பாதுகாக்கவும், பல புரோகிராம்கள் இணையத்தில் கிடைக்கின்றன. விலை கொடுத்தும் சிலவற்றைப் பெறலாம். அவற்றைப் பயன்படுத்தி, நம் பாஸ்வேர்ட்களை பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும்.

4.மவுஸ் பயன்படுத்தி புரோகிராம் இயக்கம்:


ஒரு புரோகிராமினை இயக்க ஒவ்வொரு முறையும், ஸ்டார்ட், ஆல் புரோகிராம்ஸ் சென்று, புரோகிராமின் இயக்க பைல் பார்த்து கிளிக் செய்வது; அல்லது அதன் ஐகான் மீது டபுள் கிளிக் செய்வது போன்ற பழைய பழக்கங்களை விட்டுவிடுங்கள். அல்லது குயிக் லாஞ்ச் ஏரியாவில், புரோகிராம் ஐகான்களை வைத்து, அதில் ஒரே ஒரு முறை கிளிக் செய்வதன் மூலம் அவற்றை இயக்கலாம். இப்போது இன்னும் வேகமான முறை ஒன்று உள்ளது. விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 இயக்கத் தொகுப்புகளில், ஸ்டார்ட் பட்டனை அடுத்துள்ள இடத்தில் உள்ள புரோகிராம்களில் வரிசைப்படி, அதற்கான எண்ணை விண்டோஸ் கீயுடன் அழுத்தினால், அந்த புரோகிராம் இயக்கப்படும். எடுத்துக் காட்டாக, ஸ்டார்ட் பட்டனை அடுத்து, இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பெயிண்ட், குவார்க் எக்ஸ்பிரஸ் என வைத்திருந்தால், விண்+1, விண்+2 என அழுத்தினால், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், அடுத்ததாக பெயிண்ட் எனத் திறக்கப்படும்.

5. பாதுகாப்பற்ற பிளாஷ் ட்ரைவ் :


டேட்டாவினை எடுத்துச் செல்ல, பிளாஷ் ட்ரைவ்கள் மிகவும் வசதியானவை தான். ஆனால் இதில் உள்ள டேட்டாவினை, மற்றவர் அறியாதபடி என்கிரிப்ட் செய்து நாம் வைப்பதில்லை. இதனால், அது தொலைந்திடும் பட்சத்தில், நம் தனிப்பட்ட தகவல்கள் மற்றவருக்குக் கிடைத்திடும் சூழ்நிலைகள் உருவாகிவிடும். இதில் டேட்டாவினை எளிதாக என்கிரிப்ட் செய்திட, இணையத்தில் கிடைக்கும் ட்ரூகிரிப்ட் (TrueCrypt) போன்ற புரோகிராம்களைப் பதிந்து இயக்குவது நல்லது.

6.கண்ணை மூடிக் கொண்டு நெக்ஸ்ட் அழுத்துவது:


திடீரென நம் டெஸ்க்டாப்பில் ஏதேதோ படங்களுடன் ஐகான்கள் தோன்றி நம்மை ஆச்சரியப்படுத்தும். நாம் பயன்படுத்தும் வெப் பிரவுசரிலும் இதே போல் சில தோற்றமளிக்கும். இவை தோன்றுவதற்கு நாம் தான் காரணம் என்று உங்களுக்குத் தெரியுமா? சாப்ட்வேர் அப்ளிகேஷன் ஒன்றை இன்ஸ்டால் செய்திடுகையில், என்ன ஏது எனப் படிக்காமலேயே, அடுத்தடுத்து நெக்ஸ்ட் பட்டனை அழுத்துகிறோம். இதன் மூலம் அந்த புரோகிராம்களைத் தயாரித்த நிறுவனங்களின் சோதனை டூல்கள், புரோகிராம்களை நம் கம்ப்யூட்டரில் நிறுவ நாம் சம்மதம் அளிக்கிறோம். மேலும் நமக்குத் தேவைப்படாத சில இயக்கத்திற்கும் இசைகிறோம். இது போல நாம் நம்மை அறியாமல் அளிக்கும் சலுகைகள், நம் கம்ப்யூட்டரில் மால்வேர் புரோகிராம்களை நிறுவி, நம்மை சிக்க வைக்கின்றன. எனவே, ஒரு புரோகிராமினை இன்ஸ்டலேஷன் செய்கையில், இணையப் பக்கம் வழியாக ஒன்றை டவுண்லோட் செய்கையில், நம்மிடம் எதற்கு இசைவு கேட்கப்படுகிறது என்று சரியாகப் படித்துப் பார்த்து இயங்க வேண்டும்.

7. ஒரே ஒரு பேக் அப் அபாயம்:


பலர் தங்கள் பைல்களுக்குப் பேக் அப் எடுப்பதே இல்லை. இது மிகப் பெரிய தவறு. சிலர் ஒரே ஒரு பேக் அப் பைலுடன் நிறுத்தி விடுகின்றனர். இதுவும் தவறுதான். எக்ஸ்டர்னல் ஹார்ட் ட்ரைவ் ஒன்றைப் பயன்படுத்தி, முழுமையான பேக் அப் காப்பி ஒன்றை உருவாக்குவதும், அதற்கான சாப்ட்வேர் ஒன்றை இயக்கி, குறிப்பிட்ட கால கட்டத்தில் பேக் அப் காப்பி அமைப்பதுவும் மட்டுமே சரியான வழியாகும்.


(நன்றி: தினமலர் கம்ப்யூட்டர் மலர்)

வியாழன்

பேஸ்புக்கை வேகமாக பயன்படுத்துவது எப்படி?பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் சமுதாய இணைய வலைத் தளமாக பேஸ்புக் தளம் உயர்ந்து வருகிறது. இந்த தளத்தில் பயன்படுத்தக் கூடிய ஷார்ட்கட் கீகளை இங்கு காணலாம்.

ஷார்ட்கட் கீகளைப் பயன்படுத்தும் முன், முதல் கீயான மாடிபையர் கீ ( கீ போர்டின் செயல்பாட்டினை மாற்றித் தரும் கீ) நீங்கள் பயன்படுத்தும் பிரவுசருக்கானது என்ன என்று அறிந்து, அதனை இணைக்க வேண்டும்.
விண்டோஸ் இயக்கத்தில் பயர்பாக்ஸ் பிரவுசருக்கு Alt+Shift, குரோம் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரில் Alt. இந்த கீகளுடன், கீழே தரப்படும் கீகளை இணைத்துப் பயன்படுத்தலாம்.


1. புதிய மெசேஜ் பெற  - Alt + M
2. பேஸ்புக் சர்ச் - Alt + ?
3. நியூஸ் பீட் தரும் ஹோம் பேஜ்-  Alt + 1
4. உங்கள் புரபைல் பேஜ் - Alt + 2
5. நண்பர்களின் வேண்டுகோள்கள் – Alt + 3
6. மெசேஜ் மொத்தம்  - Alt + 4
7. நோட்டிபிகேஷன்ஸ் - Alt + 5
8. உங்கள் அக்கவுண்ட் செட்டிங்ஸ் - Alt + 6
9. உங்கள் பிரைவசி செட்டிங்ஸ் – Alt +7
10. பேஸ்புக் ஹோம் பக்கம் - Alt + 8
9. பேஸ்புக் ஸ்டேட்மென்ட் மற்றும் உரிமை ஒப்பந்தம்  - Alt + 9
10. பேஸ்புக் ஹெல்ப் சென்டர்  - Alt + 0

இறுதியில் தரப்பட்டுள்ள கீகளை, மேலே குறிப்பிட்டது போல, அந்த மாடிபையர் கீயுடன் பயன்படுத்த வேண்டும்.
எடுத்துக் காட்டாக, பயர்பாக்ஸ் பிரவுசர் பயன்படுத்துபவர்கள், அவர்களின் புரபைல் பேஜ் பெற Alt+Shift+2 பயன்படுத்த வேண்டும்.

இந்த ஷார்ட்கட் கீகளில் உள்ள எண்களை, நம்லாக் செய்து கீ பேடில் இருந்து பயன்படுத்தக் கூடாது. எழுத்துக்களுக்கு மேலாக உள்ள எண்களுக்கான கீகளையே பயன்படுத்த வேண்டும்.

ஞாயிறு

நீங்கள் கூகுல் குறோமி பயன்படுத்துபவரா ? மிகப்பெரிய ஆபத்து!நீங்கள் கூகுல் குறோமி பயன்படுத்துபவரா அப்படியானால் இதை அவசியம் படியுங்கள் இன்றய browser ல் கூகுல்குறோமி தனக்கென ஒரு முத்திரை பதித்துள்ளது.அதிகமானோர் விரும்பிப் பயன் படுத்தும் browser இதில் அனைத்துவிதமான வசதிகளும் உள்ளன இந்த நவீன வசதிகளைக் கொண்ட குறோமியில் இருக்கும் மிகப்பெரிய ஆபத்து என்னவென்பதை பார்ப்போம்.

அனைவரது வீட்டிலும் இணைய இணைப்பு இருப்பதில்லை அதற்காக நாம் பிரவுஸிங் செண்டெர்களைத்தேடிச் சென்று நமது தேவைகளை பூர்த்தி செய்துகொள்கின்றோம் நீங்கள் செல்லும் இடத்தில் இருப்பவர்கள் அனைவரும் நல்லவர்களாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது அகவே நீங்கள்தான் உஷாராக இருக்கவேண்டும்

அதுவும் பெண்கள் அதிக கவனம் தேவை உங்கள் மெயில் முகவரி மட்டுமல்ல பயன்படுத்தும் கடவுச்சொல்லையும் பதிவு செய்யும் வசதி இந்த குறோமியில் உள்ளது என்பது உங்களிட்கு தெரியுமா? நீங்கள் மிகவும் கவனமாக சைன் அவுட் செய்துவிட்டு சென்றுவிடுவீர்கள் ஆனால் உங்கள் மெயில் முகவரியும் கடவுச் சொல்லும் பத்திரமாக செமிக்கப்பட்டிருக்கும் என்பது உங்களிட்கு தெரியாது.

நீங்கள் முக்கியமானவர்களிட்கு ஏதெனும் மெயில் அனுப்பியிருக்களாம் அல்லது உங்கள தகவல்களை சேமித்து வைத்திருக்களாம் இதை அவர்கள் தவறாக பயன்படுத்தவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன அதைவிட உங்கள் நண்பர்களிட்கோ அல்லது முக்கியமானவர்களிட்கோ தவறாக மெயில் அனுப்பலாம் அவர்கள் நீங்கள் அனுப்பியதாகவே நினைத்து உங்கள் அன்பை வெறுத்துவிடுவார்கள் இனிமேல் உங்களிட்கு அந்தப்பிரச்சினை இல்லை நாம் சொல்வது போல் செய்தால் போதும். எங்கு சென்று குறோமி பயன்படுத்தினாலும் ஓபன் செய்தபின் அதன் setting option என்பதை கிளிக் செய்யுங்கள் கீழ் உள்ள படத்தினை பாருங்கள்.

அதில் basic என்பதற்கு கீழ் இருக்கும் personal setuff என்பதை கிளிக் செய்து password என்பதை தெரிவுசெய்து neversave passwords என்பதில் டிக் செய்யுங்கள் கீழ் உள்ள படத்தினை பாருங்கள். அவ்வளவுதான் இனி உங்கள் வேலைகளை முடித்தபின் history கிளிக் செய்து clear all browsing data என்பதை கிளிக் செய்யுங்கள் உங்கள் டேடாக்களை பதுகாப்பது எப்பவும் உங்களிடமே உள்ளது.

கணினி பயன்ப்படுதுவோர் பின் பற்ற வேண்டியது...

இடைவெளியின்றி ஒவ்வொரு நாளும் நீண்ட நேரம் கணினியைப் பார்த்து உபயோகிக்கும் பலருக்கு உடலிலும், கண்களிலும் ஏற்படும் சிரமமே 'Computer Vision Syndrome' என்றழைக்கப் படுகிறது. கணினியில் ஒரு நாளில் மூன்று மணி நேரமும், அதற்கு மேலும் தொடர்ந்து வேலை செய்பவர்களில் 90% சதவிகிதத்தினர்க்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது.

உடலில் சோர்வு, பின் கழுத்து, முதுகு மற்றும் தலை வலி, கைகள், மணிக்கட்டு மற்றும் தோள் பட்டை வலி ஆகிய நோய்க்குறிகள் ஏற்படுகின்றன. தொடர்ந்து கணினித் திரையைப் பார்த்துக் கொண்டிருப்பதாலும், கண் இமைகள் சிமிட்டல் குறைவதாலும் கண்கள் உலர் தன்மை அடைகிறது. இதனால் கண்களில் உறுத்தல், எழுத்துக்கள் இரண்டாகவும், பலவாகவும் தெரிதல் மற்றும் பார்வை தெளிவற்றும் தோன்றுகின்றன.

இந்த சிரமங்களுக்கான காரணங்கள்:

1. உட்காரும் ஆசனத்தின் அமைப்பு, உயரம் மற்றும் நாம் உட்காரும் நிலை.

2 கணினி விசைப் பலகைக்கும், கணினித் திரைக்கும் போதுமான வெளிச்சமின்மை.

3. கணினித் திரையில், கணினி பயன் படுத்துபவர்களுக்குப் பின் புறமுள்ள சன்னல்கள் மற்றும் விளக்குகளிலிருந்து கண் கூசும் ஒளி வீச்சு.

4. கண்களுக்கும் திரைக்குமுள்ள இடைவெளி.

5. கணினி பயன்படுத்தும் தனி ஒருவரின் வயதுக்கேற்றபடி, கண்களின் சரி செய்யப்படாத தூரப் பார்வை (Myopia), கிட்டப் பார்வை (Hypermetropia), சிதறல் பார்வை (Astigmatism) மற்றும் வெள்ளெழுத்து (Presbyopia) பார்வை குறைபாடு.

6. கண்களின் தசை அழற்சியால், கண்கள் ஒருங்கிசைவு சரியில்லாதிருத்தல் (Ocular Muscle Imbalance)

எனவே, உடலிலும், கண்களிலும் ஏற்படும் சிரமங்களைத் தவிர்த்து, சரி செய்வது எப்படி?

உடலிலும், கண்களிலும் ஏற்படும் சிரமங்களெல்லாம் சாதாரணமாக தற்காலிகமானதே. கணினியில் வேலை செய்வதை நிறுத்தி எழுந்த சில நிமிடங்களில் அதிக தொல்லைகள் இராது.

கணினியில் வேலை செய்யும் போது, குறிப்புகளை விசைப் பலகைக்கு மேலும், கணினித் திரைக்கு அருகிலும் வைத்துக் கொண்டால் நல்லது. ஒரு மணிக்கொரு முறை ஆசனத்தை விட்டு எழுந்து, அலுவலகத்திற்கு உள்ளேயே சிறிது நடக்கலாம். கை கால்களை நீட்டி, மடக்கி பயிற்சி செய்யலாம். கழுத்து, தோள் இரண்டுக்கும் தக்க பயிற்சி செய்யலாம்.

1. உட்காரும் நாற்காலி உயரத்தை வேண்டுமளவு ஏற்றவும், இறக்கவும் தகுந்ததாக இருக்க வேண்டும். நிமிர்ந்து உட்காரும் பொழுது முதுகுக்குப் பொருத்தமாகவும், உட்காரவும், சாய்மானத்திலும் Foam வைத்தும் இருக்க வேண்டும். கைகளை சம நிலையில் வைக்க நாற்காலியில் கைத்தாங்கி வைத்தும் இருக்கவேண்டும்.

2. கணினி விசைப் பலகையிலும், திரையிலும் நல்ல வெளிச்சம் இருக்கும்படி விளக்குகள் அமைக்கப்பட வேண்டும்.

3. கண்கள் கூசும் ஒளி வீச்சு இருந்தால், கணினியின் இருப்பிடத்தை மாற்றியமைக்க வேண்டும்.

4. கணினியின் திரைக்கு வெகு அருகில் செல்லாமல் சற்று தூரத்திலிருந்தபடி (சுமார் 33 செ.மீ) பார்த்து வேலை செய்ய வேண்டும்.

5. கண் மருத்துவரிடம் கண்களை வருடம் ஒரு முறை, முறையாகப் பரிசோதித்து தேவைக்கேற்றபடி கண்ணாடி அணிந்து கொள்ள வேண்டும். 40 வயதிற்கு மேல் கண்கள் பரிசோதனையின் போது, Glaucoma பாதிப்பில்லையென்றறிய, கண்களின் நீர் அழுத்தத்தையும் (Intraocular Pressure) பரிசோதிக்க வேண்டும். வெள்ளெழுத்துக் கண்ணாடிகளை இரண்டு வருடத்துக்கு ஒருமுறை 40 வயதிலிருந்து 55 வயது வரை மாற்ற வேண்டியிருக்கலாம்.

6. தேவையானால், கண் தசைகளின் ஒருங்கிசைவை (Muscle Balance) அரசு கண் மருத்துவமனைகளில் பரிசோதித்துக் கொள்ளலாம். தேவையானால் பயிற்சியும் எடுத்துக் கொள்ளலாம்.

கணினியில் வேலை செய்யும்பொழுது, அவவப்பொழுது கண்களுக்கு ஓய்வு கொடுப்பது அவசியம். தொடர்ந்து கணினியைப் பார்த்துக் கொண்டிராமல், இடையிடையில் சன்னல் வழியாக தூரத்தில் உள்ள பொருளையோ, வானத்தையோ வேடிக்கை பார்க்கலாம்.

அடிக்கடி கண் இமைகளை மூடி மூடித் திறப்பதால், கண்ணீரினால் கண்கள் ஈரமாகி, கண்கள் உலர்வதையும், கண்களின் உறுத்தலையும் குறைக்கலாம். மருந்துக் கடைகளில் கிடைக்கும் Tears PLus, Moisol போன்ற சொட்டு மருந்துகளையும் உபயோகிக்கலாம்.

கண்களுக்கு மிக அருகிலுள்ள கணினித் திரையையே கண் இமைக்காமல் நீண்ட நேரம் பார்ப்பதை விட, சுலபமாகப் பின்பற்றக் கூடிய '20 - 20 - 20 சட்டம்' (20 - 20 - 20 Rule) சொற்றொடரின்படி, 20 நிமிடத்திற்கு ஒரு முறை, 20 அடி தூரத்திலுள்ள பொருட்களை, 20 நொடிகள் பார்ப்பது கண்களுக்கு ஓய்வைத் தரும் எனப்படுகிறது. அரை மணிக்கொரு முறை 20 நொடிகள் கண்களை மூடியிருப்பதும் நல்ல பயன் தரும் எனப்படுகிறது.

எனவே தகுந்த முன்னேற்பாடுகளைக் கடைப்பிடித்து உடல் நலம் பேணுவோம். கண்களைக் காப்போம்.

உங்கள் தலை முடியை பராமரிக்க...முடி உதிர்வதை தடுக்க:

வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

வழுக்கையில் முடி வளர:

கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

இளநரை கருப்பாக:

நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.

முடி கருப்பாக:

ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.

காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.

தலை முடி கருமை மினுமினுப்பு பெற:

அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.

செம்பட்டை முடி நிறம் மாற:

மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.

நரை போக்க:

தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும்.

முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.

முடி வளர்வதற்கு:

கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

சொட்டையான இடத்தில் முடி வளர:

நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.

புழுவெட்டு மறைய:

நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்.

சனி

சித்ரா பௌர்ணமி அன்று எண்ணெய் தேய்த்து குளிப்பது ஏன் தெர்யுமா?


சித்ரா பௌர்ணமிக்கு உரிய தெய்வம் சித்ரகுப்தர், இவர் தான் எமனுடைய கணக்குபிள்ளை, மனிதர்களின் பாவ, புண்ணியக் கணக்குகளை எமதர்மர்க்கு எடுத்து உரைப்பதே இவரது பணி, இந்த கணக்குகளை வைத்தே ஒருவருக்கு சொர்கமா, நரகமா என்று முடிவு எடுக்கப்படும் ,சித்ரகுப்தர் சித்ரா பௌர்ணமி அன்று மக்களின் பாவ புண்ணியங்களை கணக்கெடுப்பு நடத்துவாராம். எனவே அன்றைய தினம் சித்ர்குப்தரை வணங்கினால் நன்மை ஏற்படும் என்பது வழக்கம்."நான் இது வரை செய்த பாவங்களை முழுக்கு போட்டு விடுகிறேன் , நான் இனிமேல் புண்ணிய காரியங்களில் ஈடுபடுகிறேன், என் கணக்கை நல்ல முறையில் எழுது" என்று சித்ர்குப்தரை வணங்கி இன்றைய தினம் எண்ணெய் தேய்த்து குளித்தால் நல்லதே நடக்கும் என்பது சாஸ்திரம்.

வாழ்கையை ஆனந்தமாக வாழுங்கள்..! - சிறுகதை

ஒரு கிராமத்துக்கு ஒரு யோகி வந்தார். அவர் முகத்தில் தெய்வீகக்களை வீசியது. எல்லோரு அவரிடம் சென்று "சுவாமி.. ஏதாவது சொல்லுங்கள்..?" என்று கேட்டனர். அதற்கு யோகி "வாழ்கையை ஆனந்தமாக வாழுங்கள்..!" என்றார்.. மறுநாளும் எல்லோரும் சென்று "ஏதாவது சொல்லுங்கள்..!" என்று பணிவுடன் கேட்டனர். மீண்டும் அவர் "வாழ்கையை ஆனந்தமாக வாழுங்கள்..!" என்றே சொன்னார். சிலநாள் இது தொடர வருகை தந்தவர்கள் வராமலே போனார்கள்.

அவரைக் கண்டாலே பலர் "ஐயோ.. போதுமய்யா..!" என்று ஒடினார்கள்.. முடியாது போக கிராம தலைவர் கோபமாக கேட்டார். "முதற்தடவை கேட்கும் போது நன்றாக இருந்தது. ஆனால் அதையே எத்தனை தடவை கேட்பது.. வேறு போதனைகள் கொடுக்கலாமே..?" என்றார்.

யோகி புன்னகையோடு சொன்னார். "என்னிடம் இன்னும் நிறைய போதனைகள் இருக்கின்றன. ஆனால் நீங்கள் இன்னமும் என் முதல் போதனையையே கடைப்பிடிக்கவில்லையே, உணர்வு பூர்வமாக அது உங்கள் வாழ்வின் முறையாக மாறிவிட்டால் நான் அடுத்த போதனையைக் கொடுக்கிறேன்..!"

இப்படிதான் ஆன்மீகங்களை கேட்பதுவும் வாசிப்பதும் என்று நம் அறிவு செல்கிறதே தவிர.., அவை செயலில் அல்ல. என்று நாம் கற்றவை வாழ்வில் செயல்ப் படுகிறதோ.. அப்போதுதான் அவை பூரணம் அடைகின்றன.

ஆயுளைப் பெருக்கும் வாழைப் பூ

இயற்கையின் படைப்புகளில் பூக்கள் மிகவும் அற்புதமானது. ஒவ்வொரு பூவூம் ஒவ்வொரு விதமான அழகையும் மருத்துவக் குணங்களையும் கொண்டுள்ளது.

நம் முன்னோர்கள் வாழையை பெண் தெய்வமாக வழிபட்டனர். மணவிழா, மங்கள விழாக்களில் வாழை முக்கிய இடம்பெற்றிருக்கும். வாழையின் அனைத்து பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டுள்ளன.

வாழையிலையில் சாப்பிடும் போது ஆரோக்கியத்தைத் தருவதுடன் ஆயுளையும் அதிகரிக்கச் செய்கிறது.

குலை வாழையை தலைமகனோடு ஒப்பிடுகின்றனர். வாழைப்பூ எந்த அளவுக்கு நமக்குப் பயன்படுகிறது என்பதற்கு இதுவே மிசச் சிறந்த சான்று.

வாழைப்பூ மூலஇரத்தம் மாபிரமி வெட்டைபித்தம்
கோழைவயிற் றுக்கடுப்பு கொல்காசம் - அழியனல்
என்னஎரி கைகால் எரிவுத் தொலைத்துடலில்
மன்னவளர்க் குந்தாது வை.
- அகத்தியர் குணபாடம்

வாழைப்பூ துவர்ப்புச் சுவையுடையது.

சர்க்கரை நோயாளிகளுக்கு

சர்க்கரை நோயை சித்த மருத்துவத்தில் மதுமேக நோய் என்பார்கள்.

குறிப்பாக தென்னிந்தியாவிலும், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வாழ்பவர்களில் 60 சதவீதத்திற்கு மேல் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்னர். சர்க்கரை நோய்க்கு மூலகாரணம் நம் உணவு முறையே.

தற்போது நாம் உண்ணும் உணவில் உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் கிடைப்பதில்லை. இரசாயனம் கலந்த உணவையே சாப்பிட நேரிடுகிறது. மேலும், போதிய உடற்பயிற்சியின்மை, சில நேரங்களில் அதிக வேலைப்பளு, சரியான நேரத்திற்கு உணவருந்தாமை போன்றவையால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு செயலிழந்து சர்க்கரை நோயை உண்டாக்குகின்றன. சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டவர்கள் வாழைப்பூவை சுத்தம் செய்து சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கணையம் வலுப்பெற்று உடலுக்குத் தேவையான இன்சுலினைச் சுரக்கச் செய்யும். இதனால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.

இரத்த மூலம்

மலம் வெளியேறும்போது இரத்தமும் சேர்ந்து வெளியேறும். இதனை இரத்த மூலம் என்கிறோம். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாரம் இருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்துவந்தால் இரத்த மூலம் வெகுவிரைவில் குணமாகும்.

உடல் சூடு

உடல் சூடு உள்ளவர்கள் வாழைப்பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்து கடைந்து நெய் சேர்த்து வாரம் இருமுறை உண்டுவந்தால் உடல் சூடு குறையும்.

வயிற்றுக் கடுப்பு நீங்க

சிலருக்கு அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அதனால் வயிற்றுக்கடுப்பு உண்டாகும். இதனால் சீதக் கழிச்சல் ஏற்படும். இவர்கள் வாழைப்பூவை நீரில் கலந்து அதனுடன் சீரகம் , மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரை இளஞ்சூடாக அருந்தி வந்தால் வயிற்றுக்கடுப்பு நீங்கும்.

பெண்களுக்கு

பெண்களுக்கு வாழைப்பூவை வரப்பிரசாதம் என்று சொல்லலாம். மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு அதிக உதிரப்போக்கு உண்டாகும். அவர்கள் வாழைப்பூவின் உள்ளே இருக்கும் வெண்மையான பாகத்தை பாதியளவு எடுத்து நசுக்கி சாறு பிழிந்து சிறிது மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால் உதிரப்போக்கு கட்டுப்படும். உடல் அசதி, வயிற்று வலி, சூதக வலி குறையும்.

வெள்ளைப்படுதல்

வெள்ளைப்படுதலால் பெண்கள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகின்றது. இவர்கள் வாழைப்பூவை இரசம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் கட்டுப்படும்.

கைகால் எரிச்சல் நீங்க

கை கால் எரிச்சலால் அவதிப்படுபவர்கள் வாழைப்பூவை இடித்து அதனுடன் சிற்றாமணக்கு எண்ணெய் சேர்த்து வதக்கி கை கால் எரிச்சல் உள்ள பகுதிகளில் ஒற்றடம் கொடுத்து வந்தால் கை கால் எரிச்சல் குணமாகும்.

இருமல் நீங்க

வறட்டு இருமல் உள்ளவர்கள் வாழைப்பூ இரசம் செய்து அருந்திவந்தால் இருமல் நீங்கும்.

தாது விருத்திக்கு

வாரம் இருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்து உண்டுவந்தால் தாது விருத்தியடையும்.

மலட்டுத்தன்மை நீங்க

சிலர் குழந்தையின்மையால் பல மன வேதனைக்க்கு ஆளாவர். இவர்களுக்கு வாழைப்பூ ஒரு வரப்பிரசாதம். வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பாக்கியம் பெறுவர்.

நோய்களுக்கு மருந்தாகும் இயற்கை உணவுகள்...

இயற்கையின் படைப்புகளில் பூக்கள் மிகவும் அற்புதமானது. ஒவ்வொரு பூவூம் ஒவ்வொரு விதமான அழகையும் மருத்துவக் குணங்களையும் கொண்டுள்ளது.

இந்த இதழில் ஆயுளைப் பெருக்கும் வாழைப்பூ பற்றி தெரிந்துகொள்வோம்.

நம் முன்னோர்கள் வாழையை பெண் தெய்வமாக வழிபட்டனர். மணவிழா, மங்கள விழாக்களில் வாழை முக்கிய இடம்பெற்றிருக்கும். வாழையின் அனைத்து பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டுள்ளன.

வாழையிலையில் சாப்பிடும் போது ஆரோக்கியத்தைத் தருவதுடன் ஆயுளையும் அதிகரிக்கச் செய்கிறது.

குலை வாழையை தலைமகனோடு ஒப்பிடுகின்றனர். வாழைப்பூ எந்த அளவுக்கு நமக்குப் பயன்படுகிறது என்பதற்கு இதுவே மிசச் சிறந்த சான்று.

வாழைப்பூ மூலஇரத்தம் மாபிரமி வெட்டைபித்தம்
கோழைவயிற் றுக்கடுப்பு கொல்காசம் - அழியனல்
என்னஎரி கைகால் எரிவுத் தொலைத்துடலில்
மன்னவளர்க் குந்தாது வை.
- அகத்தியர் குணபாடம்

வாழைப்பூ துவர்ப்புச் சுவையுடையது.

சர்க்கரை நோயாளிகளுக்கு

சர்க்கரை நோயை சித்த மருத்துவத்தில் மதுமேக நோய் என்பார்கள்.

குறிப்பாக தென்னிந்தியாவிலும், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வாழ்பவர்களில் 60 சதவீதத்திற்கு மேல் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்னர். சர்க்கரை நோய்க்கு மூலகாரணம் நம் உணவு முறையே.

தற்போது நாம் உண்ணும் உணவில் உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் கிடைப்பதில்லை. இரசாயனம் கலந்த உணவையே சாப்பிட நேரிடுகிறது. மேலும், போதிய உடற்பயிற்சியின்மை, சில நேரங்களில் அதிக வேலைப்பளு, சரியான நேரத்திற்கு உணவருந்தாமை போன்றவையால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு செயலிழந்து சர்க்கரை நோயை உண்டாக்குகின்றன. சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டவர்கள் வாழைப்பூவை சுத்தம் செய்து சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கணையம் வலுப்பெற்று உடலுக்குத் தேவையான இன்சுலினைச் சுரக்கச் செய்யும். இதனால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.

இரத்த மூலம்

மலம் வெளியேறும்போது இரத்தமும் சேர்ந்து வெளியேறும். இதனை இரத்த மூலம் என்கிறோம். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாரம் இருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்துவந்தால் இரத்த மூலம் வெகுவிரைவில் குணமாகும்.

உடல் சூடு

உடல் சூடு உள்ளவர்கள் வாழைப்பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்து கடைந்து நெய் சேர்த்து வாரம் இருமுறை உண்டுவந்தால் உடல் சூடு குறையும்.

வயிற்றுக் கடுப்பு நீங்க

சிலருக்கு அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அதனால் வயிற்றுக்கடுப்பு உண்டாகும். இதனால் சீதக் கழிச்சல் ஏற்படும். இவர்கள் வாழைப்பூவை நீரில் கலந்து அதனுடன் சீரகம் , மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரை இளஞ்சூடாக அருந்தி வந்தால் வயிற்றுக்கடுப்பு நீங்கும்.

பெண்களுக்கு

பெண்களுக்கு வாழைப்பூவை வரப்பிரசாதம் என்று சொல்லலாம். மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு அதிக உதிரப்போக்கு உண்டாகும். அவர்கள் வாழைப்பூவின் உள்ளே இருக்கும் வெண்மையான பாகத்தை பாதியளவு எடுத்து நசுக்கி சாறு பிழிந்து சிறிது மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால் உதிரப்போக்கு கட்டுப்படும். உடல் அசதி, வயிற்று வலி, சூதக வலி குறையும்.

வெள்ளைப்படுதல்

வெள்ளைப்படுதலால் பெண்கள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகின்றது. இவர்கள் வாழைப்பூவை இரசம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் கட்டுப்படும்.

கைகால் எரிச்சல் நீங்க

கை கால் எரிச்சலால் அவதிப்படுபவர்கள் வாழைப்பூவை இடித்து அதனுடன் சிற்றாமணக்கு எண்ணெய் சேர்த்து வதக்கி கை கால் எரிச்சல் உள்ள பகுதிகளில் ஒற்றடம் கொடுத்து வந்தால் கை கால் எரிச்சல் குணமாகும்.

இருமல் நீங்க

வறட்டு இருமல் உள்ளவர்கள் வாழைப்பூ இரசம் செய்து அருந்திவந்தால் இருமல் நீங்கும்.

தாது விருத்திக்கு

வாரம் இருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்து உண்டுவந்தால் தாது விருத்தியடையும்.

மலட்டுத்தன்மை நீங்க

சிலர் குழந்தையின்மையால் பல மன வேதனைக்க்கு ஆளாவர். இவர்களுக்கு வாழைப்பூ ஒரு வரப்பிரசாதம். வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பாக்கியம் பெறுவர்.

வெள்ளி

உங்களுடைய இந்த ஆவணங்கள் தொலைந்தால் எப்படி திரும்பப் பெறுவது?

இது ஒரு பயனுள்ள தகவல் மறக்காமல் படித்து விட்டு நண்பர்களுடன் பகிரவும். நன்றி.

1.இன்ஷூரன்ஸ் பாலிசி!

யாரை அணுகுவது..?

பாலிசியை விநியோகம் செய்த கிளையை.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

முகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின் நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் இடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல்.

எவ்வளவு கட்டணம்?

ஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக ரூ.75 கட்ட வேண்டும். இது தவிர, கவரேஜ் தொகையில் 1,000 ரூபாய்க்கு 20 காசு வீதம் கவரேஜ் தொகைக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

கால வரையறை:

விண்ணப்பம் அளித்த 15 நாட்களுக்குள் நகல் ஆவணம் கிடைக்கக்கூடும்.

நடைமுறை:

நகல் பாலிசி கோரும் விண்ணப்பக் கடிதம் அளித்தால் அதற்குரிய இரண்டு ஆவணங்கள் தருவார்கள். அதில் ஒரு ஆவணத்தை 80 ரூபாய் பத்திரத்தில் டைப் செய்துகொள்ள வேண்டும்.  இன்னொரு ஆவணத்தில் பாலிசி தொலைந்து போன விவரங்கள் கேள்வி பதில் வடிவில் கேட்கப்பட்டிருக்கும்; அதை பூர்த்தி செய்து நோட்டரி பப்ளிக் ஒப்புதலோடு, ஆவணங்களை இணைத்து தர வேண்டும்.

2.மதிப்பெண் பட்டியல்! (பள்ளி மற்றும்கல்லூரி)

யாரை அணுகுவது..?

பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
மதிப்பெண் பட்டியல் நகல்,
பள்ளி மாற்றுச் சான்றிதழ்,
கட்டணம் செலுத்திய ரசீது.

எவ்வளவு கட்டணம்?

உயர்நிலைப் பொதுத்தேர்வு (10-ம் வகுப்பு) ரூ.105.

மேல்நிலை பொதுத்தேர்வு ( 2) பட்டியல் ரூ.505.

கால வரையறை:
விண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்கள்.

நடைமுறை:

காவல் துறையில் புகார் அளித்து 'கண்டுபிடிக்க முடியவில்லை’ என சான்றிதழ் வாங்கியபிறகு,
முன்பு படித்த பள்ளி/நிறுவனத்தின் மூலம் விண்ணப்பம் வாங்கி அதை பூர்த்தி செய்து தாசில்தாரிடம்
கையொப்பம்  வாங்க வேண்டும்.

அந்த விண்ணப்பத்தோடு ஒரு கடிதம் மற்றும் இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும்.
இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு அதன் அடிப்படையில் அவர் பள்ளித் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார்.

தனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.
பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும்.

3.ரேஷன் கார்டு!
யாரை அணுகுவது..?

கிராமப்புறங்களில் வட்டார உணவுப் பொருள் வழங்கு அலுவலர்;
நகர்ப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்கு துறை மண்டல உதவி ஆணையர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

காணாமல் போன குடும்ப அட்டையின் நகல் அல்லது
ஏதாவது ஒரு அடையாள அட்டை

எவ்வளவு கட்டணம்?

புதிய ரேஷன் கார்டு வாங்கும்போது ரூ.10 கட்ட வேண்டும்.

கால வரையறை:

விண்ணப்பம் அளித்த 45 நாட்களுக்குள் கிடைத்துவிடும்.

நடைமுறை:
சம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில் காணாமல் போன விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தர வேண்டும். அவர்களின் விசாரணைக்குப் பிறகு புது குடும்ப அட்டை அனுப்பி வைக்கப்படும்.

4.டிரைவிங் லைசென்ஸ்!

யாரை அணுகுவது?

மாவட்டப் போக்குவரத்து அதிகாரி.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
பழைய லைசென்ஸ் நகல் அல்லது எண்.

எவ்வளவு கட்டணம்?

கட்டணம் ரூ.315 (இலகுரக மற்றும் கனரக வாகனம்).

கால வரையறை:
விண்ணப்பம் செய்தபிறகு அதிகபட்சமாக ஒரு வாரம்.

நடைமுறை:
காவல் துறையில் புகார் தெரிவித்து, அவர்களிடம்
FIR ( NON TRACEABLE ) சான்றிதழ் வாங்கியபிறகு
மாவட்டப் போக்குவரத்து அதிகாரிக்கு விண்ணப்ப மனு
கொடுக்க வேண்டும்.

5.பான் கார்டு!

யாரை அணுகுவது?

பான் கார்டு பெற்றுத் தரும் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்டுகள் அல்லது வருமான வரித்துறை.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இரண்டு, அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று நகல்கள்.

எவ்வளவு கட்டணம்?

அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.96 ரூபாய்.

கால வரையறை: விண்ணப்பித்தப் பிறகு 45 நாட்கள்.

நடைமுறை:
பான் கார்டு கரெக்ஷன் விண்ணப்பம் வாங்கி அதில் தேவையான விவரங் களைக் குறிப்பிட்டு
விண்ணப்பிக்க வேண்டும்.

6.பங்குச் சந்தை ஆவணம்!

யாரை அணுகுவது?

சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பதிவாளர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறை சான்றிதழ், பங்கு ஆவணத்தின் நகல்
அல்லது ஃபோலியோ எண்.

எவ்வளவு கட்டணம்?

தனியாக கட்டணம் கட்டத் தேவையில்லை; ஆனால்,
பங்குகளின் சந்தை மதிப்பிற்கு ஏற்ப முத்திரைத்தாள்
கட்டணம் செலுத்த வேண்டும்.

கால வரையறை:

விண்ணப்பித்த 45 நாட்களிலிருந்து 90 நாட்களுக்குள்.

நடைமுறை:
முதலில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு கடிதம் எழுதவும். இதன் அடிப்படையில் காவல் துறையில்
புகார் அளித்து சான்றிதழ் வாங்க வேண்டும்.
பங்குகள் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனம் குறிப்பிடும் தொகைக்கு
முத்திரைத்தாளில் ஒப்புதல் கடிதம் தர வேண்டும்.
சில நிறுவனங்கள் செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிட வலியுறுத்தும்.

7.கிரயப் பத்திரம்!

யாரை அணுகுவது..?

பத்திரப்பதிவு துறை துணைப் பதிவாளர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறை கடிதம், பத்திரிகையில் வெளியிடப்பட்ட
விளம்பரம், யாரிடமும் இருந்து ஆட்சேபனை
வரவில்லை என்பதற்கான நோட்டரி பப்ளிக் ஒருவரின்
உறுதிமொழி, சர்வே எண் விவரங்கள்.

எவ்வளவு கட்டணம்?
ஆவணக் கட்டணம் 100 ரூபாய்.
இது தவிர, கூடுதலாக ஒவ்வொரு பக்கத்திற்கும் 20
ரூபாய்.

கால வரையறை:
ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.

நடைமுறை:
கிரயப் பத்திரம் தொலைந்த பகுதியில் உள்ள காவல்
நிலையத்தில் புகார் அளித்து அவர்களிடமிருந்து
சான்றிதழ் வாங்க வேண்டும். தொலைந்த விவரம்
குறிப்பிட்டு பத்திரிகையில் விளம்பரம் செய்ய
வேண்டும்.

இதற்குபிறகு சார்பு பதிவாளர் அலுவலம் செல்ல
வேண்டும்.

8.டெபிட் கார்டு!

யாரை அணுகுவது..?

சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

கணக்குத் தொடர்பான விவரங்கள்.

எவ்வளவு கட்டணம்?
ரூ.100.

கால வரையறை:
வங்கியைப் பொறுத்து ஓரிரு நாட்கள் அல்லது
அதிகபட்சம் 15 நாட்கள்.

நடைமுறை:
டெபிட் கார்டு தொலைந்தவுடன் அந்த வங்கி
வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தகவல்
தெரிவித்து, அதன் மூலம் மோசடியான
பரிவர்த்தனைகள்
நடக்காதவாறு தடுக்க வேண்டும். அதற்குப் பிறகு
சம்பந்தப்பட்ட கிளைக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி
புது டெபிட் கார்டு வழங்குமாறு கோர வேண்டும்.

9 மனைப் பட்டா!

யாரை அணுகுவது..?

வட்டாட்சியர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்.?
நகல் பட்டா கோரும் விண்ணப்பம்.

எவ்வளவு கட்டணம்?
ரூ.20.

கால வரையறை:
ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.

நடைமுறை:
முதலில் தாசில்தாரிடம் மனு தர வேண்டும். அவர்
பரிந்துரையின் பேரில் கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.),
வருவாய் ஆய்வாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.
இதன் அடிப்படையில் தாசில்தார் அலுவலகத்தில்
விண்ணப்பித்தால் நகல் பட்டா கிடைத்துவிடும்.

9.பாஸ்போர்ட்!

யாரை அணுகுவது..?

மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறை சான்றிதழ், பழைய பாஸ்போர்ட் நகல்,
20 ரூபாய் முத்திரைத்தாளில் விண்ணப்பம்.

எவ்வளவு கட்டணம்?
ரூ.4,000.

கால வரையறை:
இந்தியாவில் தொலைத் திருந்தால் 35-லிருந்து 40 நாட்கள்;
வெளிநாட்டில் தொலைத்திருந்தால் அதிக காலம் எடுக்கும்.

நடைமுறை:
பாஸ்போர்ட் தொலைத்த பகுதியில் உள்ள காவல்
துறையில் புகார் அளித்து கண்டுபிடிக்கப்படவில்லை
என்கிற சான்றிதழ் வாங்க வேண்டும். 20 ரூபாய்
முத்திரைத்தாளில் தொலைந்த விவரங்களை பதிவு
செய்துகொள்ள வேண்டும். இவற்றில் நோட்டரி பப்ளிக்
ஒருவரின் கையெழுத்து பெற்று மண்டல பாஸ்போர்ட்
அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன்
அடிப்படையில் அவர்கள் விசாரணை மேற்கொண்ட
பிறகு நகல் பாஸ்போர்ட் அனுப்பி வைத்துவிடுவார்கள்.

10.கிரெடிட் கார்டு!

கிரெடிட் கார்டு தொலைந்ததும் உடனடியாக
வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தகவல் அளித்து
பரிவர்த்தனைகளை நிறுத்த வேண்டும்.

யாரை அணுகுவது?
நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையம்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
தொலைந்துபோன கிரெடிட் கார்டு தொடர்பான
விவரங்கள்.

எவ்வளவு கட்டணம்?
ரூ.100 (நிறுவனத்துக்கேற்ப வேறுபடும்).

கால வரையறை:
15 வேலை நாட்கள்.

நடைமுறை :
தொலைந்த கார்டுக்கு மாற்றாக வேறு கார்டு அளிக்கக்
கோரினால் பதினைந்து வேலை நாட்களுக்குள்
உங்களுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். அடையாளச்
சான்று காண்பித்து வாங்க வேண்டும்.

Courtesy :விகடன்

வியாழன்

" உங்க டூத்பேஸ்ட் " - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்..! SHARE THIS....." உங்க டூத்பேஸ்ட்ல ஆக்ஸிஜன் இருக்கா..? " -னு
சூர்யா கேட்டாரேன்னு அந்த பேஸ்ட் வாங்கி
யூஸ் பண்ண ஆரம்பிச்சேன்...

அப்புறம்
" உங்க டூத்பேஸ்ட்ல உப்பு இருக்கா..? " -னு
அனுஷ்கா கேட்டாங்க... அதனால அதையும்
வாங்கினேன்..

சரி மேட்டர்க்கு வருவோம்...

கம்பெனிக்காரன் குடுத்த காசை வாங்கிட்டு அது இருக்கா..? இது இருக்கான்னு கேட்டாங்களே தவிர... அதுல நிக்கோடின் இருக்குன்னு யாருமே சொல்லலை...

என்னாது நிக்கோடினா..?!!

( அடப்பாவிகளா.. நிம்மதியா பல்லு வெளக்க
கூட விட மாட்டீங்களா..?!!! )

DISPAR ( Delhi Institute of Pharmaceutical Sciences & Research )
நிறைய இந்திய டூத்பேஸ்ட்ல நிக்கோடின்
இருக்குன்னு கண்டுபிடிச்சி இருக்காங்க..

( நிக்கோடின் கேன்சரை உண்டாக்கும் )

Colgate, Vicco, Dabur, Himalaya இப்படி 24 Brands எடுத்து சோதனை பண்ணினதுல 7 Brands-ல நிக்கோடின் கலந்து இருக்கறது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கு..

ஒரு சிகரெட்லயே 2mg தான் நிக்கோடின் இருக்காம். ஆனா Colgate Herbal-ல அதிகபட்சமா 18mg /gm நிக்கோடின் இருக்காம்..

அப்ப நாம ஒரு தடவை இந்த பேஸ்ட்ல பல்லு விளக்கினா... அது 9 சிகரெட் குடிச்சதுக்கு சமம்... அவ்வ்வ்....!!!

இந்த ஆராய்ச்சி முடிவு 2011-லயே வந்திருச்சி, ஆனா இதை பத்தி நமக்கு எதுவுமே தெரியாம பாத்துகிட்ட நம்ம பத்திரிக்கை , டி.வி சேனல்களோட சேவையை எப்படிதான் பாராட்றது..?

" என்னங்க இது அநியாயமா இருக்கு..?
நம்ம கவர்மெண்ட் என்ன பண்ணுது..?"-னு
தானே கேக்க வர்றீங்க..?

ம்ம்... என்னங்க பண்றது..?

காசுக்காக மக்களுக்கு கவர்மென்ட்டே சாராயம் விக்கிற நாடுங்க இது..

இங்கே போயி நியாயமாவது, தர்மமாவது..! — SHARE THIS.....

அகதி அடையாளம்

 

80-களில் ஐரோப்பாவுக்குச் சென்றவர்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்திருக்கிறது. அவர்கள் மருத்துவர்களாக, பொறியாளர்களாக வளர்ந்திருக்கிறார்கள். ஆனால், தாய் நிலம் என்று சொல்லக்கூடிய தமிழகத்துக்கு வந்த ஈழ அகதிகளில் மருத்துவராக உருவான ஓர் ஈழ அகதியைக்கூட நீங்கள் பார்க்க முடியாது. இதுதான் இங்கு அவர்களின் நிலை. இதை எல்லாவற்றையும்விட மிகப் பெரியக் கொடுமை க்யூ பிரிவு போலீ ஸாரின் துன்புறுத்தல்கள்தான். தொடர்ந்து கண்காணிப்பது, அச்சுறுத்துவது, மிரட்டுவது, பொய் வழக்குகள் போடுவது எனத் தொடர்கிறது க்யூ பிரிவு போலீஸாரின் மனித உரிமை மீறல்கள். இன்னொரு பக்கம் ஐ.நா- வுக்கான அகதிகள் சாசனத்தில் இந்தியா கையெழுத்திடாத காரணத்தால், இந்த அகதி களுக்கு எந்த உரிமையும் வழங்காமல் குற்றப்பரம்பரையினரைப் போல வைத்திருக் கிறார்கள். இந்தியா கையெழுத்திடாத காரணத்தால் இந்த அகதிகள் விஷயத்தில், ஐ.நா-வும் தலையிட முடியாது. இத்தனை துன்பங்களையும் தாங்கி இங்கே அன்றாடம் செத்துச் செத்து வாழ்வதைவிட, கடல் தாண்டி சுயமரியாதையான ஒரு வாழ்வைத் தேடிச் செல்கிறார்கள். மரணம் உடன்வரும் பயணம் என்று தெரிந்துதான் கடல் கடக் கிறார்கள் என்றால், அதைவிட இந்த வாழ்வைத் துன்பமாக நினைக்கிறார்கள் என்பதே கசப்பான உண்மை!'' என்கிறார் புகழேந்தி.
அகதிகளுக்கு தமிழக அரசு என்ன செய்கிறது?

குடும்பத் தலைவருக்கு மாதம் 1,000 ரூபாய். 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 750 ரூபாய். 12 வயதுக்குக் கீழானவர்களுக்கு 400 ரூபாய். பெரியவர்களுக்கு நாளன்றுக்கு 400 கிராம் அரிசி.
எட்டு வயதுக்குட்பட்டவர்களுக்கு 200 கிராம் அரிசி. சமீபமாக 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. முதியவர்களுக்கு 1,000 ரூபாய் ஓய்வூதியம். சர்க்கரை, அரிசி, பருப்பு போன்ற உணவுப் பொருட்களை ரேஷனில் பணம் கொடுத்துப் பெற்றுக்கொள்ளலாம்.

ஏன் ஆஸ்திரேலியா?

ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்ல 30-ல் இருந்து 35 லட்சங்கள் வரை ஆகும். ஆனால், ஆஸ்திரேலியப் பயணத்துக்கு அதிகபட்சம் இரண்டு லட்ச ரூபாய் போதும். இலங்கையில் போர் முடிந்த பின்னர் தஞ்சம் கோரி சன் சீ என்ற கப்பல் கனடாவில் கரையேறியது. அந்தக் கப்பல் ஆடுகளை ஏற்றி இறக்கப் பயன்படுத்தப்பட்ட கப்பல். சற்றே பெரிய ஆழ்கடல் மீன்பிடியிலிருந்து 'ஓய்வளிக்கப்பட்ட’ பழைய படகுகள் வரை இவர் களின் தொலைதூரக் கடல் பயணத்துக்குப் பயன் படுகிறது. ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல 20-ல் இருந்து 22 நாட்கள் வரை ஆகும். இந்த நாட்களுக்கான உணவுகள், குடிநீர், டீசல் போன்றவற்றைச் சேமித்துக்கொண்டு மீன் பிடிக்கக் கிளம்புவதுபோலக் கிளம்புகிறார்கள். தொழில்முறை படகோட்டிகளோ நீச்சலில் தேர்ந்தவர்களோ இல்லா ததால், தவறி கடலில் விழுபவர்களைக் காப்பாற்றுவதற்கான வழிவகைகூட இல்லாமல் அப்பாவி அகதிகளை ஏற்றியபடி செல்கின்றன இந்த அகதிப் படகுகள். பிரமாண்ட கப்பல்களே தவிர்க்கும் கொந் தளிப்பான கடல் பரப்பைக் கடந்தால் மட்டுமே, சென்று சேர வேண்டிய அந்த கனவுத் தீவை இவர்கள் அடைய முடியும்!

அகதி என்ற ஓர் அவமானத்தைச் சுமந்து எந்த நேரமும் இலங்கைக்குத் துரத்தப் படலாம் என்ற அச்சத்தோடு வாழும் ஈழ அகதிகளில் 15 ஆண்டுகளாக இங்கு வாழ்வோரின் விருப்பத்தைக் கேட்டறிந்து அவர் களுக்குக் குடியுரிமை கொடுக்க வேண்டும். இல்லையெனில், துயரப் பெருங் கடலில் நாடற்றவர்களாக மிதந்துகொண்டிருக்கும் ஈழ அகதிகளின் கனவுகளை, கடலில் கரைத்த பாவிகளாகியிருப்போம். ஆகவே மத்திய மாநில அரசுகளே... இந்த மக்கள் மீது கொஞ்சம் கருணை காட்டுங்கள்!
நன்றி : (அருள் எழிலன்) & விகடன்.

கணினி பயன்படுத்துபவர்கள் கண்களைப் பாதுகாக்க சில குறிப்புகள்

நீங்கள் கணினியின் முன்பு நீண்ட நேரம் அமர்ந்து பணிபுரிபவரா? உங்கள் கண்களைப் பாதுகாக்க சில குறிப்புகளை பார்ப்போம்.

ஆயர்வேத மருத்துவ அடிப்படைத் தகவல்(Ayarveta Medical Basic Information) என்ன சொல்கிறதெனில், மனிதனின் உடல் பஞ்ச பூதங்களால் ஆனது. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் (Land, water, fire, air, space) என ஐம்பூதங்கள்.

இவையனைத்தும் ஒன்றாய் தொகுத்து உருவாக்கப்பட்டதே மனிதனின் உடல்.

ஆயுர்வேத மருத்துவத்தின் அடிப்படையில் நீங்கள் உங்கள் கண்களுக்கும், உடலுக்கும் எப்படி பாதுகாப்பு அளிப்பது என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

தொடர்ந்து இடைவிடாமல் கணனியில் உட்கார்ந்துகொண்டு வேலைப் பார்ப்பவர்களுக்கு உடல் சோர்வு உண்டாகும். உடல் சோர்வில் கண்களும் அடங்கும். கணனியால் அதிக பாதிப்புக்கு உள்ளாகும் உறுப்பு கண்கள்தான்.

அடிக்கடி computer Screen Blink ஆவதால்தான் கண்களுக்குப் பிரச்னையே உண்டாகிறது. தொடர்ந்து இவ்வாறான ஒளிகளை கண்கள் சந்திப்பதால் உடலில் உள்ள உயிர்த்துடிப்பை இயக்குகிற காற்று சிரமத்திற்கு ஆட்படுகிறது.

அடிக்கடி ஒளிரும் கணனித் திரையால் உடலில் உள்ள உணர்ச்சி மண்டலம், புலன் உணர்வு மற்றும் மூளை போன்ற நரம்பு தொடர்பான இத்தியாதிகள் கூடுதல் பணிச்சுமைக்கு ஆட்படுத்தப்படுகின்றன.

உடலில் உள்ள பஞ்ச பூதங்களில் ஒன்றான காற்று அதிக சிரமத்திற்கு உள்ளாவதால்தான் மனதும் சோர்வடைந்து மன இறுக்கம் ஏற்படுகிறது. தொடர்ந்து இவ்வாறு மூளைக்கு வேலை கொடுப்பதால் அதிக உடல்சோர்வும், மனச்சோர்வும் ஏற்படுகிறது.

மனச்சோர்வு, உடல் சோர்வு, கண்கள் சோர்வடைவதை எப்படி தடுப்பது?

அமெரிக்க மருத்துவரான ஜூடித் மாரிசன் இதற்கென சில வழிமுறைகளை நமக்கு கற்றுக்கொடுக்கிறார். பெண் மருத்துவரான இவர் ஆயுர்வேத முறைப்படி நல்லெண்ணையை முகம் முழுவதுமாக பூசி மசாஜ் செய்யச்சொல்கிறார்.

பின்னர் முழங்கையில் தொடங்கி விரல் நுனிகள் வரை நல்லெண்ணையை (Sesame oil)தடவி நன்றாக மசாஜ் செய்யச் சொல்கிறார்.

சில நேரம் கணனியின் இயக்கத்தை நிறுத்திவிட்டோ அல்லது எழுந்து வெளியில் சென்று ஒரு ஐந்து நிமிடமாவது பேசிவிட்டு வரச் சொல்கிறார். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையாவது இப்படி ஐந்து நிமிடம் ஓய்வு எடுத்தால் உடலும், மூளையும் ஒரு சீரான நிலைக்கு மீண்டும் திரும்பும்.

அவ்வப்போது உங்கள் கைவிரல்களை நீட்டி மடக்கலாம். நீங்கள் உங்கள் கை விரல்கள், மற்றும் கைகளை இலேசாக அழுத்தி மசாஜ் செய்துகொள்ளலாம். இதனால் நரம்புகளில் இரத்த ஓட்டம் சீராகும்.

கணனி இருக்கையில் உட்கார்ந்தவாறே கூட உங்கள் கண்களுக்கு நீங்கள் ஓய்வளிக்கலாம் (You can rest your eyes).

உள்ளங்கை கொண்டு உங்கள் கண்களை மூடிக்கொண்டு நான்கு புறமும் கண்களை சுழற்றுவதன் மூலம், ஒரு நேர்க்கோட்டுப் பார்வையில் வேலை செய்த உங்கள் கண்களும், கண் தசை நார்களும் இயல்பு நிலைக்கு திரும்ப வைக்கலாம். இயல்பு நிலைக்கு கண் தசைநார்கள்(Eye ligaments) திரும்புவதால் கண்களுக்கு ஏற்படும் சோர்வு, அயற்சி நீங்கும்.

கணனி முன்பு நீண்ட நேரம் அமர்ந்து பணி செய்யும் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்கள், அக்கவுண்டன்ட், முழுநேர பதிவர்கள், மென்பொருள் பொறியாளர்கள், மற்றும் மாணவர்கள் ஆகியோர்கள் இந்த முறையைப் பயன்படுத்தி நல்ல பலனைப் பெறலாம். இரவில் இந்த நல்லெண்ணை மசாஜ் செய்துகொள்ளலாம்.

பகலில் கைவிரல்கள், தோள்பட்டை, பின்னங்கழுத்து, முதுகுத் தண்டு (Fingers, shoulder, hind neck, spinal cord) ஆகியவற்றை நீங்களே பிடித்துவிட்டுக்கொள்வதன் மூலம் இலேசாக நீவிக்கொள்வதன் மூலம் முதுகு வலி, கழுத்து வலி, முழங்கை வலி (Back pain, neck pain, elbow pain) ஆகிய வலிகளிலிருந்து நீங்கள் தற்காத்துக்கொள்ள முடியும்.

அடிக்கடி கண்களுக்கு பயிற்சி அளித்துக்கொள்வதன் மூலம் கண்களை பாதுகாத்துக்கொள்ள முடியும்.

உடலுக்கு நன்மை பயக்கும் காய்கறிகள்!


'உணவே மருந்து, மருந்தே உணவு' என்ற சித்தர்களின் கூற்றை கடைப்பிடித்தாலே நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம். நம் முன்னோர்கள் தாங்கள் மேற்கொண்ட உணவு பழக்கங்களின் மூலம் எந்தவகையான நோயின் தாக்குதலுமின்றி ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.

இன்றைய நிலையை சற்று எண்ணிப் பார்ப்போமானால், 10 நபரில் 4 பேர் நீரிழிவு நோயின் தாக்குதலுக்கு ஆளானவராகவும், 3 பேர் இருதய சம்பந்தப்பட்ட நோயாளியாகவும், மீதம் 3 பேர் ஏதேனும் வேறு நோயின் தாக்குதலுக்கு ஆளானவராகவும் இருப்பார்கள்.

நம் மக்கள் தொகையில் 50 வயதுக்குமேல் உள்ளவர்களில் எந்த நோயும் இல்லாமல் இருப்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இன்று மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை என்பது மிகவும் சாதாரணமான விஷயமாகிவிட்டது. நகரங்களில் 10 அடிக்கு ஒரு மருந்தகம்.

இதில் இன்னும் கொடுமையான விஷயம், நோயை சரிசெய்துகொள்ள மருத்துவமனைக்குச் சென்றால், அங்கு காலாவதியான மருந்துகள், போலி மருந்துகள், என கள்ளச்சந்தை பொருட்கள் நோயாளிகளின் உயிர்களை பறிக்கின்றன.

இதற்கெல்லாம் மூலகாரணம் யாரென்று சிந்திப்போமேயானால் கண்டிப்பாக அது நாம்தான்.. உடலை சீராக பேணுவதை தவிர்த்து பொருள் தேடும் நோக்கில் தன்னை மறந்து அலைந்ததன் விளைவுதான் இது..

இடையிடையே களைப்பு ஏற்பட்டால், செயற்கை குளிர்பானங்கள், அவசரகதி உணவு வகைகள், பதப்படுத்தப்பட்ட பொருட்கள் என கண்டவற்றையும் வாங்கி உண்கிறோம். மனதையும் உடலையும் ரிலாக்ஸ் செய்கிறோம் என்ற பெயரில் மது, புகை போதை வஸ்து என ஆரம்பித்து அதற்கு அடிமையாகிறோம்.

இப்படியாக நோய்களை நாம் காசுகொடுத்து வாங்கி, உடலையும் நோயையும் இணைபிரியா நண்பர்களாக்கி நமக்குள் வளர்த்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் நம் முன்னோர்களின் உணவு பெரும்பாலும் இயற்கையைச் சார்ந்தே இருந்து வந்தது. உதாரணமாக அரிசியை எடுத்துக் கொண்டால் கைக்குத்தல் அரிசி, அதாவது உமி நீக்கி தவிடு நீக்கப்படாத அரிசி. இந்த தவிடு நீக்கப்படாத அரிசியில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் வைட்டமின் பி1 நிறைந்துள்ளது. இது இருதயத்திற்கும், நரம்பு மண்டலத்திற்கும் ஊட்டமளிக்கக்கூடியது.

மேலும் தானிய வகைகள், இயற்கையாய் விளையும் காய்கறிகள் என உண்டுவந்துள்ளனர். அதனால் அவர்கள் நோயின்றி வாழ்ந்தனர். ஆனால் இன்று அனைவருமே வெள்ளை வெளேரென்று பூப்போன்ற சாப்பாட்டைத்தான் விரும்புகின்றனர். நாகரீகம் என்ற பெயரிலும், அந்நிய பொருள் மோகத்திலும் இயற்கையை மறந்து செயற்கையையே உண்மையென நம்பி அதற்குள் ஊறிவிட்டனர்.

இந்த நிலை மாறுவதென்பது சற்று சிரமம்தான். இருப்பினும் அதோடு, உடலுக்கு நன்மை பயக்கும் காய்கறிகள், கனிகள், தானியங்களை உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் தொந்தரவுகள் மேலும் அதிகமாகாமல் பார்த்துக்கொள்ளலாம்.

அவற்றில் சிலவற்றை பார்ப்போம்:
வாழைப்பூ:
இதில் இரும்புச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின் ஏ, பி, சி சத்துக்கள் நிறைந்துள்ளன. இரத்தச் சோகையை வராமல் தடுத்து உடலுக்கு தெம்பையும் புத்துணர்வையும் தரவல்லது.

வாழைத்தண்டு:
இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி, சி நிறைந்துள்ளது. இரத்தத்தை சுத்தப்படுத்தும். இரத்தத்தில் உள்ள தேவையற்ற அசுத்த நீரை பிரித்தெடுக்கும். சிறுநீரகத்தின் செயல்பாடுகளை சீராக்கி சிறுநீரக கல் அடைப்பை தடுக்கும்.

வாழைக்காய்:
இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி, சி, சத்துக்கள் அதிகம் உள்ளது. வாயுவைத் தூண்டும் குணமுள்ளதால் இதை சமைக்கும்போது அதிகளவில் பூண்டு சேர்த்துக்கொள்வது நல்லது. மலச்சிக்கல் தீர்க்கும்.

பாகற்காய்:
வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. நன்கு பசியைத் தூண்டும். உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.

சேப்பங்கிழங்கு:
கால்சியம், பாஸ்பரஸ் அதிகம் நிறைந்துள்ளது. இவை எலும்புகளையும், பற்களையும் உறுதிப்படுத்தும்.

பீட்ரூட்:
கால்சியம், சோடியம், பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. மலச்சிக்கலைப் போக்கும், இரத்த சோகையை சரிபடுத்தும்.

வெண்டைக்காய்:
போலிக் அமிலம், கால்சியம், பாஸ்பரஸ் நிறைந்துள்ளன. மூளை வளர்ச்சியைத் தூண்டும். நன்கு பசியை உண்டாக்கும். மலச்சிக்கலைப் போக்கும்.

கோவைக்காய்:
வைட்டமின் ஏ, கால்சியம், போலிக் அமிலம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துக்கள் நிறைந்தள்ளன. வயிற்றுப்புண், வாய்ப்புண், மூல நோயின் தாக்குதல் போன்றவற்றை நீக்கும்.

முருங்கைக் காய்:
வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து நிறைந்துள்ளது. பெண்களுக்கு மாதவிலக்கின்போது உண்டாகும் அதிக உதிரப்போக்கைத் தடுக்கும். விந்து உற்பத்தியைப் பெருக்கும்.

சுண்டைக்காய்:
புரதம், கால்சியம், இரும்புச்சத்து, கணிசமாக உள்ளது. உணவில் சுண்டைக்காய் சேர்த்து வந்தால் வயிற்றுப் புழுக்களை கொல்லும். உடல் வளர்ச்சியைத் தூண்டும்.

சுரைக்காய்:
புரதம், கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி, நிறைந்துள்ளது. இவை உடல் சோர்வை நீக்கி, உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

குடைமிளகாய்:
வைட்டமின் ஏ, பி,சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கணிசமாக உள்ளது. அஜீரணக் கோளாறை நீக்கி செரிமான சக்தியை தூண்டும்.

சௌசௌ:
கால்சியம், வைட்டமின் சி, சத்துக்கள் உள்ளன. எலும்பு, பற்களுக்கு உறுதியைக் கொடுக்கும்.

அவரைக்காய்:
புரதம், நார்ச்சத்து மிகுந்துள்ளது. இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தேகத்தை பலப்படுத்துகிறது. மலச்சிக்கலைப் போக்குகிறது.

காரட்:
உடலுக்கு உறுதியைக் கொடுக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

கொத்தவரங்காய்::
இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, பி, சி நிறைந்துள்ளது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

கத்தரி பிஞ்சு:
கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. செரிமான சக்தியை தூண்டி நன்கு பசியை உண்டாக்கும்.

புதன்

குரு சிஷ்யன்! (சிறுகதை)முன்னொரு காலத்தில் புகழ்பெற்ற குரு ஒருவர் இருந்தார். இவரிடம் இளைஞன் ஒருவன் சீடாக இருந்தான். தன்னுடைய சுற்றுப்புறத்தைப் பற்றியோ, தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களைப் பற்றியோ யோசிக்க மாட்டான்.

குருகுலத்திற்கு வந்து போகிறவர்கள் அவனைப் பார்த்துவிட்டு, "இவன் பூமிக்குப் பாரம், சோற்றுக்குத் தெண்டம்' என்று ஏளனம் பேசினர். அவனைப் பற்றி சுவாமிகளிடம் குறை கூறினர்.

சுவாமிகளின் பார்வையோ வேறுவிதமாய் இருந்தது. அவருடைய கண்ணுக்கு அந்த இளைஞன் ஞானானுபவத்தில் திளைப்பவனாகவே தெரிந்தான். அவனுடைய அறிவு தீட்சண்யத்தை அவர் சரிவரப் புரிந்து கொண்டிருந்தார். எனவே, தம்முடைய வாரிசாக அவனைக் கருதி வந்தார்.

அன்று நள்ளிரவு நேரம். குருநாதர், தம்முடைய மாணவர்கள் தங்கியிருந்த இடத்துக்கு வந்தார். அங்கே அந்த இளைஞனை தவிர மற்றவர்கள் உறங்கிக் கொண்டிருந்தனர். அவர்களுக்குப் பக்கத்தில், அவர்கள் படித்த புத்தகங்கள் கிடந்தன. அவனைத் தேடிக்கொண்டு வெளியே வந்தார் குருநாதர். அவன், கொடும்பனியில் நட்டநடு வழியில் படுத்திருந்தான். அவனருகே, ஒரு சுவடி நூல் இருந்தது. அதில் ஆங்காங்கே, அவன் எழுதிய விளக்கக் குறிப்புகளும் காணப்பட்டன. அவற்றை மேலோட்டமாய் பார்த்த குருநாதர் வியப்புற்றார். தூங்கிக் கொண்டிருந்த சீடனை தொந்தரவு செய்ய விரும்பாமல், தன்னுடைய மேலாடையை எடுத்து அவருக்குப் போர்த்தினார். சுவடிக் கட்டுடன் உள்ளே சென்றார். இரவு நெடுநேரம் வரை சீடனின் குறிப்புரைகளை அவர் அக்கரையோடு படித்தார். தமக்குள் பாராட்டிக் கொண்டார்.

பொழுது விடிந்தது. கண்விழித்தான் இளைஞன். பக்கத்தில் சுவடிகளைக் காணவில்லை. குருவின் மேலாடையை யாரோ அவன் மீது போர்த்தியிருந்தனர். மாணவர்களில் யாரேனும் அந்தக் குறும்புச் செயலைக் செய்திருக்க வேண்டும் என்று பட்டது. ஆனாலும், குருவின் மேலாடையை இரவு முழுதும் தான் போர்த்திக் கொண்டிருந்தோம் என்பதே அவனுக்கு நடுக்கத்தைக் கொடுத்தது. குருவிடம் மன்னிப்பு கேட்பதற்காக அவருடைய அறைக்குச் சென்றான் இளைஞன். குருநாதர் அவனை வரவேற்று, ""நீதான் இதையெல்லாம் எழுதியதா?'' என்று அன்புடன் கேட்டார்.

""ஐயனே! நான் ஏதேனும் தவறு செய்திருந்தால் என்னை மன்னிக்க வேண்டும்!'' என்று கூறியபடி, அவர் பாதங்களில் விழுந்து வணங்கினான்.

""தன் சீடன் மற்றவர்கள் நினைக்கிற மாதிரி ஒன்றும் மந்தபுத்திக்காரன் அல்ல; அவன் ஞானவான்!'' என்று எல்லாரிடமும் பெருமையாய் சொன்னார் சுவாமிகள். அன்று முதல் அந்த இளைஞனை தம்முடைய முதன்மைச் சீடராக அறிவித்தார் குரு.

அந்தச் சீடர்தான் பிற்பாடு, ஸ்ரீ ராகவேந்திரர் என்று உலகோரால் வணங்கிப் போற்றப்படுபவர்.

தம்முடைய சீடர்களின் திறமையையும், திறமையின்மையையும் குருநாதர் சரிவரப் புரிந்து கொண்டிருப்பார்.

விண்டோஸ் கீ + ஷார்ட் கட்


கீ போர்டில் இடது புறமாகக் கீழ் வரிசையில் கண்ட்ரோல் மற்றும் ஆல்ட் பட்டன்களுக்கிடையில் உள்ளது விண்டோஸ் லோகோ கீ. இதனை வேறு சில கீகளுடன் அழுத்துகையில் நம்மால் சில செயல்பாடுகளை மேற்கொள்ள முடியும். விண்டோஸ் கீ மற்ற கீகளுடன் இணைக்கும்போது ஏற்படும் செயல்பாடுகள் :
Win key : தனியே அழுத்துகையில் ஸ்டார்ட் மெனு தோன்றும், மறையும்.
Win key + M : அனைத்து விண்டோக்களும் மினிமைஸ் செய்யப்படும்.
Win key + Shift + M : மினிமைஸ் செய்த விண்டோக்கள் அனைத்தும் திறக்கப்படும்.
Win key + D : திறந்திருக்கும் புரோகிராம்கள் அனைத்தையும் மினிமைஸ் செய்திடும். அடுத்து அழுத்துகையில் மினிமைஸ் செய்யப்பட்ட புரோகிராம்களை காட்டும்.
Win key + Tab: டாஸ்க் பாரில் உள்ளவற்றை சுழற்றிக் காட்டும்.
Win key + E: மை கம்ப்யூட்டர் திறக்கப்படும்
Win key + F: பைல் அல்லது போல்டர் தேடப்படும்.
Win key +F1: விண்டோஸ் ஹெல்ப் விண்டோ கிடைக்கும்.
Win key+L : விண்டோஸ் கீ போர்டு லாக் ஆகும்.
Win key+ BREAK: சிஸ்டம் புராபர்ட்டீஸ் டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.
Win key + R : Start menu வில் கிடைக்கும் Run box
Win key + F : Start menu வில் கிடைக்கும் Find window
Win key + E : Explorer தொகுப்பு திறக்கப்படும்.
Win key + Pause/Break : System Properties திறக்கப்படும்.

இல்லை! இல்லை !!இல்லை !!! • அரேபியாவில் ஆறுகள் இல்லை
 • அத்தி, பலாமரங்கள் பூ பூப்பதில்லை.
 • ஆமைக்குப் பற்கள் இல்லை.
 • இந்திய ஜனாதிபதிக்கு ஓய்வுபெறும் வயதிற்கு வரம்பு இல்லை.
 • இனிப்பை உணர்ந்தறியும் சக்தி பூனைக்கில்லை.
 • இலந்தைமரங்களில் பறவைகள் கூடு கட்டுவதில்லை.
 • இந்தியாவில் எரிமலைகள் இல்லை.
 • ஈசலுக்கு வயிறு இல்லை.
 • உலகில் 26 நாடுகளில் கடலோ, கடற்கரையோ இல்லை.
 • ஐஸ்லாந்தில் ரெயில்கள் இல்லை.
 • ஒட்டகங்களுக்கு நீந்தத் தெரிவதில்லை.
 • ஹவாய்த் தீவில் பாம்புகள் இல்லை.
 • கடலில் முதலைகள் வாழ்வதில்லை.
 • பல்லி தண்ணீர் குடிப்பதே இல்லை.
 • பக்ரைன் நாட்டு தேசியகீதத்தில் வார்த்தைகளே இல்லை.
 • மாசிடோனியா நாட்டுக்கு தேசியக் கொடி இல்லை.
 • மலைப் பாம்புகளுக்கு நஞ்சு இல்லை.
 • யமுனை நதி கடலில் கலப்பதில்லை.
 • யானையின் துதிக்கையில் எலும்புகள் இல்லை.
 • வண்ணத்துப் பூச்சிகளுக்கு வாயில்லை.
 • ஜோர்டான் நதியில் மீன்கள் இல்லை.
 • ஸ்பெயின் நாட்டில் தந்தை பெயரை முதல் எழுத்தாகப் பயன்படுத்தவில்லை.
 • கிவி பறவைக்கு இறக்கைகள் இல்லை.
 • குயில்கள் கூடுகட்டி வாழ்வதில்லை.
 • குயில்கள் குளிர்காலத்தில் கூவுவதில்லை.
 • பூடான் நாட்டில் திரைஅரங்குகள் இல்லை.
 • பூச்சிகளும் புழுக்களும் தூங்குவதில்லை.

செவ்வாய்

பயத்தை வெல்வது எப்படி?

பயம் மனித உணர்ச்சிகளில் மிக இயல்பானது. அது தேவையானதும் கூட. பல சந்தர்ப்பங்களில் அது நம் பாதுகாப்பிற்கு உதவுகிறது. முட்டாள்தனமாகவும், கண்மூடித் தனமாகவும் நாம் நடந்து கொள்ளாமல் இருக்க உதவுகிறது. ஆபத்தான சூழ்நிலைகளில் அஜாக்கிரதையாய் இருந்து விடாமல் நம்மைத் தடுக்கிறது. எனவே தான் “அஞ்சுவது அஞ்சாமை பேதைமை” என்றார் திருவள்ளுவர்.

பலரும் குற்றங்களில் ஈடுபடாமல் இருக்க முக்கியக் காரணம் தண்டனைக்குப் பயந்து தான். அந்தப் பயம் இல்லா விட்டால் சமூகத்தில் சீரழிவே ஏற்படும். எனவே பயப்பட வேண்டியதற்கு பயப்பட்டுத் தான் ஆக வேண்டும். தவறுகள் செய்ய அஞ்சவே வேண்டும்.

விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் ஆபத்தான செயல்களில் ஈடுபட பயப்படுவதே புத்திசாலித்தனம். குற்றங்களில் ஈடுபட அஞ்சவே வேண்டும். இதில் எல்லாம் பயம் ஏற்படுவது இயற்கை நமக்கு அளித்திருக்கும் பாதுகாப்பு அரணே. தோன்றியபடியெல்லாம் நடந்து கொள்ளாமல் தடுத்து நம்மை சிந்திக்க வைப்பதால், நம் வேகத்தைப் பல சந்தர்ப்பங்களில் கட்டுப்படுத்துவதால் பயம் நமக்கு நன்மையை செய்கிறது என்பதில் சந்தேகமேயில்லை.

ஆனால் பயம் ஒரு எல்லையை மீறும் போது, அறிவு சாராமல் இருக்கும் போது அது நமக்கு நன்மையை விட அதிக தீமையையே செய்வதாகிறது. அந்த சமயங்களில் அது பாதுகாப்பு அரணாக இருப்பதற்குப் பதிலாக அடிமைச்சங்கிலியாக மாறி நம்மை செயலிழக்க வைத்து விடுகிறது.

நம்மை செயலிழக்க வைக்கும் பயத்திற்கு மிக முக்கிய காரணம் விளைவுகளைக் குறித்து நமக்கு ஏற்படும் விபரீதக் கற்பனைகளே. என்ன எல்லாம் நேரக் கூடும் என்று ஒருவன் கற்பனைக் குதிரையைத் தட்டி விடும் போது அவன் மனம் வரக் கூடிய பயங்கர விளைவுகளை எல்லாம் பட்டியல் இட ஆரம்பித்து விடுகிறது. இப்படி எல்லாம் ஆனால் என்ன செய்வது என்று யோசிக்க ஆரம்பிக்கும் போது பயம் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்து விடுகிறது. சமாளிப்பது எப்படி என்று தெரியாமல் அவன் ஸ்தம்பித்துப் போகிறான்.


அதே போல் புதியதாக ஒன்றைத் தொடங்கும் முன் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்கிற பயம், குறைத்து மதிப்பிட்டு விடுவார்களோ என்கிற பயம், தோற்று விட்டால் என்ன செய்வது என்கிற பயம் ஏற்பட்டு அந்த செயலை ஆரம்பிக்கவே விடாமலும் செய்து விடுகின்றது. வெற்றிக்காகவே முயல்கிறோம் என்றாலும் தோல்வி வெட்கப்பட வேண்டிய ஒன்றல்ல.

உலகில் மிக உயர்ந்த வெற்றிகளைக் குவித்த வெற்றியாளர்களை ஆராய்ந்தவர்கள் அவர்கள் கூட 60 சதவீத முயற்சிகளில் தான் வெற்றி அடைந்து இருக்கிறார்கள் என்று தெரிவிக்கிறார்கள்.

அதாவது நாம் போற்றும் பெரிய வெற்றியாளர்களே பத்து முயற்சிகளில் நான்கு முயற்சிகளில் தோற்றுப் போகிறார்கள் என்றால் தோல்வி சாதாரணமான ஒன்று தானே. அதில் வெட்கித் தலைகுனிய என்ன இருக்கிறது?

இரண்டாம் உலகப்போருக்கு முன்னால் அமெரிக்கா பொருளாதார நிலையில் மிகவும் சீரழிவை சந்திக்க வேண்டி வந்தது. வேலையில்லா திண்டாட்டம், வங்கிகளில் பணமில்லாமை எல்லாம் மக்கள் மனதில் தங்கள் எதிர்காலத்தைப் பற்றி பெரியதொரு பயத்தை ஏற்படுத்தியது. அப்போதைய ஜனாதிபதி பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர். ”இப்படிப்பட்டவராலேயே நம் நாட்டின் இன்றைய நிலையைத் தவிர்க்க முடியவில்லையே, இனி நம் எதிர்காலம் என்ன?” என்ற பயம் மக்களிடம் பரவி இருந்தது.

அந்த சமயத்தில் தான் ஃப்ராங்க்ளின் டிலானோ ரூஸ்வெல்ட் அமெரிக்க அதிபராகப் பதவியேற்றார். அவர் தன் நாட்டு மக்களுக்கு ஆற்றிய முதல் உரையில் சொன்ன செய்தி வரலாற்று சிறப்பு மிக்கது. “நாம் பயப்பட வேண்டிய ஒரே விஷயம் பயமே. ஏனெனில் அந்த இனம் புரியாத, ஆதாரமற்ற, உண்மையைச் சார்ந்திராத பயம் நம் பின்னடைவை மீறி முன்னேற விடாமல் நம்மை செயலிழக்க வைப்பதில் வல்லதாக இருக்கிறது”

அவர் அதிபராக இருந்த காலத்தில் இரண்டாம் உலகப் போரையும் மீறி அமெரிக்கா பொருளாதாரத்தில் முன்னேறியதோடு வல்லரசு நாடாகவும் உருமாறியது. அதற்கு மிக முக்கிய காரணம் பயத்தை நிராகரித்து தைரியத்தைத் துணை கொண்டு செயல்படும் ஒரு தலைமை அந்த நாட்டிற்கு இருந்தது தான் என்பதில் சந்தேகம் இல்லை.

அதெல்லாம் சரி, பயம் இயல்பாகவே வந்து விடுகிறதே, அதை விலக்கி வெற்றி பெறுவது எப்படி என்று கேட்போருக்கு சில ஆலோசனைகள்-

முதலில் பயத்திற்கான காரணங்கள் கற்பனையா இல்லை உண்மை தானா என்று அலசுங்கள். அந்த காரணங்கள் உண்மைக்குப் புறம்பான அனுமானத்தின் அடிப்படையில் ஏற்பட்டவையாக இருந்தால் உறுதியான மனத்தோடு புறக்கணியுங்கள். அந்த கற்பனை காரணங்களிலும், அனுமானங்களிலும் அதிக நேரம் எண்ணங்களைத் தங்க விடாதீர்கள். ஏனென்றால் அதிக காலம் அந்த எண்ணங்களிலேயே இருந்தால் அதையே உண்மை என மனம் நம்ப ஆரம்பித்து விடும். பின் பயம் நம்மை ஆட்கொள்ளவும் ஆரம்பித்து விடும்.

ஒருவேளை அந்தக் காரணங்கள் கற்பனை அல்ல, உண்மையின் அடிப்படையில் தான் எழுந்தவை என்றானால் அந்தக் காரணங்களை அங்கீகரியுங்கள். உண்மையை புறக்கணிப்பது எக்காலத்திலும் நல்லதல்ல. ஆனால் பயத்தினால் செயலிழப்பதும் புத்திசாலித்தனமல்ல என்பதை மறந்து விடாதீர்கள். பயப்படும் படியான விளைவுகளையும், சூழலையும் மாற்ற என்ன செய்ய வேண்டும் என்பதை அறிவுபூர்வமாக சிந்தியுங்கள்.

மனம் உடனடியாக அந்த செயலை செய்யாமல் இருப்பதே சிறந்தது என்று உடனடியாகச் சொல்லும். அந்த செயல் தேவையற்றதாகவும், எவ்விதத்திலும் நம் முன்னேற்றத்திற்கு உதவாததாகவும் இருந்தால் இரண்டாவது சிந்தனையே தேவையில்லை. அச்செயலைத் தவிர்ப்பது புத்திசாலித்தனம். ஆனால் அந்த செயல் நம்மை நல்ல சூழலுக்கு மாற்ற உதவுவதாகவும், உண்மையான முன்னேற்றத்திற்கு உதவக்கூடியதாகவும் இருந்தால் செயல்படாமல் இருப்பது ஒரு புத்திசாலித்தனமான தீர்மானம் அல்ல என்பதை உணருங்கள்.

அதிகம் பாதிக்கப்படாமல் செயலைச் செய்து முடிக்கும் வழிகளை சிந்தியுங்கள். இந்த சூழ்நிலைகளை சமாளித்து வென்றவர்கள் என்ன செய்தார்கள், எப்படி சமாளித்தார்கள் என்றும் கவனியுங்கள். அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்.

தோல்வியைப் பற்றிய பயம் என்றால் ஒரு உண்மையைத் திரும்பத் திரும்ப மனதில் பதியுங்கள். ”இந்த உலகில் எதிலுமே தோல்வி அடையாதவன் இது வரை தோன்றவில்லை. இனி தோன்றப் போவதுமில்லை”. நீங்களும் விதிவிலக்கல்ல என்பதை உணருங்கள். முன்பு கூறியது போல மாபெரும் வெற்றியாளர் கூட பத்து முயற்சிகளில் சராசரியாக நான்கு முயற்சிகளில் தோல்வி அடைகிறார்கள் என்றால் தோற்பதில் வெட்கப்பட என்ன இருக்கிறது?

மரியோ புஸோ எழுதிய “காட் ஃபாதர்” நாவலில் முக்கிய கதாபாத்திரமான காட் ஃபாதர் பயத்தையே அறியாதவனாக படைக்கப்பட்டது. அதற்கு முக்கியமான காரணம் அவன் ”ஒரு மனிதனுக்கு ஒரு விதி தான் இருக்க முடியும்” என்று விஷயத்தை உறுதியாக நம்பியது தான். என்ன நடக்குமோ அது நடந்தே தீரும் என்றால் பின் பயந்து நடுங்க என்ன இருக்கிறது?இது கூட ஒரு வகையில் பயத்தைப் போக்கும் சித்தாந்தமல்லவா?

நீங்கள் இறை நம்பிக்கை உடையவராக இருந்தால் உங்களுக்கு கடவுளின் துணை என்றும் இருப்பதாக நம்புங்கள். கடவுள் துணையாக இருக்கையில் எது தவறாகப் போக முடியும்? தன்னம்பிக்கையைக் குறைக்க முடிந்த பயம் கடவுள் நம்பிக்கை முன் சக்தியற்றுப் போவது நிச்சயம்.


அப்படியும் பயம் போகவில்லை என்றாலும் பயந்து கொண்டே ஆனாலும் செய்ய வேண்டியதைச் செய்ய ஆரம்பியுங்கள். செயல் புரிய ஆரம்பித்தவுடனேயே பெரும்பாலான பயங்கள் நம்மை விட்டு தானாக அகல ஆரம்பிக்கின்றன. சூரியனைக் கண்ட பனித்துளி போல அவை இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகின்றன.

மொத்தத்தில் எப்படியாவது பயம் உங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு முன் பயத்தை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வாருங்கள். முடிவில் பயம் அர்த்தமற்றது என்பதை நீங்கள் கண்டிப்பாக உணர்வீர்கள்.

(  -நன்றி என்.கணேசன்-இணையத்திலிருந்து )
இந்த வலைப்பதிவை நீங்கள் விரும்பினால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.